15348 தாதியக் கல்லூரி யாழ்ப்பாணம்: பொன்விழா மலர் 1960-2010.

சி.ஜெயக்குமார் (பிரதம அசிரியர்). யாழ்ப்பாணம்: தாதியக் கல்லூரி, 1வது பதிப்பு, 2010. (யாழ்ப்பாணம்: அன்ரா பிறிண்டேர்ஸ், இல. 356A, கஸ்தூரியார் வீதி). 

xxviii, 244 பக்கம், புகைப்படங்கள், தகடுகள்,  விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26×18.5 சமீ.

பொன்விழாக் கண்ட யாழ்ப்பாணம் தாதியக் கல்லூரியின் ஐம்பதாவது ஆண்டு நிறைவாக வெளியிடப்பட்டுள்ள சிறப்பு மலர் இதுவாகும். கல்லூரி வரலாறு, அன்று முதல் இன்று வரை கல்லூரியின் வளர்ச்சிக்காய் அரும்பணியாற்றிய போதனாசிரியர்கள், யாழ்.போதனா வைத்தியசாலையும் அதன் வளர்ச்சியும், முதியோர் பராமரிப்பு பற்றிய ஒரு நோக்கு, குழந்தைகளில் பொதுவாக ஏற்படும் போசணைக் குறைபாட்டு நிலைகளும் தடுக்கும் வழிமுறைகளும், இறப்பும் இறப்பை எதிர்கொள்ளலும், தொடர்புகளைப் பேணி உறவுகளை வளர்ப்போம், பெண்களைத் துன்புறுத்தும் புற்றுநோய்கள், கரு தந்த அன்னை(கவிதை), அலைமோதும் யௌவனம், தலைக் காயம், சிறுவர் துஷ்பிரயோகமும் சிறுவர் உரிமையும், யாழ்ப்பாணததில் மருத்துவத்தினதும் நவீன தாதியத்தினதும் தோற்றுவாய், தாதியத்தில் உளவளத் துணையின் பங்கு, வைத்தியசாலைத் தொற்றுக்களைத் தடுத்தல், சிக்கல்கள் இல்லாத பிரசவத்திற்கான பராமரிப்பு, குழந்தையின் பொற்காலம் எது?, வைத்தியசாலையில் உணவு வழங்கல், அறியாமை சார்ந்த பாலியல் பிரச்சினைகள், முறிவுகள், ஆரோக்கியமான பற்களுக்கு, கோபம் கொடியது, அதிர்ச்சி, சர்வதேச தாதியர் சபை (ICN), இரைப்பை குடல் அழற்சி, மாரடைப்பும் அதற்கான முதல் உதவியும், தாய்ப்பாலூட்டல், விற்றமின் ஏ, சிறுநீரகக் கற்களால் சிக்கலா?, ஆரோக்கியமான உங்கள் பாதங்களுக்கு, வலிப்பு, மதுவில்லாத வாழ்வு நோக்கி, மந்த போசனையைத் தடுப்பதற்காக உலகளவில் மேற்கொள்ளப்படும் நிகழ்ச்சித் திட்டம், குருதி சுத்திகரிப்பு (Dialysis), 21ஆம் நூற்றாண்டில் இலங்கைத் தாதியத்தின் எழச்சியும், எதிர்நோக்கும் சவால்களும் அவற்றுக்கான தீர்வுகளும், தாதியத்தின் மகிமை (கவிதை), உத்தம பணி (சிறுகதை), மாதவிலக்கு ஓய்தல், காசநோய், எரிகாயங்கள், தாதிய சேவையின் மகத்துவம், குழந்தைநலத் தாதியமும் தாதியும், உயர்குருதி அமுக்க நோயை கட்டுப்படுத்தல், பக்கவாதம் எனும் பாரிசவாதம், சத்தமில்லாது உயிர் கொல்லும் அரக்கன், ஆவல் தீர்ந்தது, பாம்புக்கடி, நெருப்புக் காய்ச்சலும் அதன் பராமரிப்பும், விலங்கு விசர் நோய், தாதிய சேவை அன்றும் இன்றும் என்றென்றும், செயற்கருவிகள் ஆகிய தலைப்புகளில் தாதிய மாணவர்கள், ஆசிரியர்களால்  எழுதப்பட்ட ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் சுன்னாகம் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 19086).

ஏனைய பதிவுகள்

エクストラ デュース インセイン フィフティ ハンド ポジション: 無料でリボルブも楽しめます!

投稿 追加ボーナス Deuces Wild 50 スロット ゲームの楽しみを与える 完全無料の Deuces Crazy Poker Web でプレイする 非常にボーナスのデュース クレイジー ビデオ ポーカーをリアルマネーでプレイできます。それ以外の場合は無料です Ttr ギャンブル企業 ログオン ソフトウェア インターネットに登録 追加ボーナス デュース ナッツ