ந.சிவராஜா (மூலம்), மலையரசி சிவராஜா (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: திருமதி மலையரசி சிவராஜா, 47/3, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி, 1வது பதிப்பு, மார்ச் 2021. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
viii, 78 பக்கம், புகைப்படம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ.
இது வைத்திய கலாநிதி அமரர் நடராஜா சிவராஜா அவர்களின் ஞாபகார்த்த வெளியீடு. 13.03.2021 அன்று இடம்பெற்ற அன்னாரின் இரண்டாம் ஆண்டு நினைவுதின நிகழ்வின்போது வெளியிடப்பெற்றது. தமிழ் பேசும் சமூக சுகநல சேவையாளர்களுக்கு தமது அடிப்படை சுகாதார ஆரம்ப பயிற்சிகளின் பின்னர் சுகாதார அறிவை சுயமாக மேம்படுத்திக்கொள்ளும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் (UNICEF)அனுசரணையுடன் 1995ம் ஆண்டு தை மாதம் முதல் ‘சுகமஞ்சரி’ என்ற சஞ்சிகை, யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சமூக மருத்துவத் துறையினரால் வெளியிடப்பட்டது. அத்துறையின் தலைவராகப் பணியாற்றிய வைத்திய கலாநிதி நடராஜா சிவராஜா அவ்வப்போது சுகமஞ்சரியின் இதழ்களில் 1995-2002 காலகட்டத்தில் எழுதிய சுகநலன் சார்ந்த 26 சிறு கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. வைத்திய கலாநிதி அமரர் நடராஜா சிவராஜா, நூல்தேட்டம் தொகுப்பாசிரியர் நூலகவியலாளர் என்.செல்வராஜா அவர்களின் மூத்த சகோதரருமாவார்.