15350 தொற்றும், தொற்றா நோய்கள் பற்றி அறியவேண்டியவை: ஆரோக்கிய வாழ்க்கைக்கு வழிகாட்டி.

ந.சுகந்தன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2019. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

79 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 275., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-674-8.

தொற்றும், தொற்றா நோய்கள் பற்றி, பாடசாலை மாணவர்கள் முதல் முதியோர் வரை விளங்கக்கூடிய வகையில் மிகவும் எளிமையான மொழிநடையில் எழுதப்பட்ட கட்டுரைகளின் மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த மரணங்களுக்கு யார் பொறுப்பு?, உணர்வுகளைப் புரிந்துகொள்வதும் கையாள்வதும், நீரிழிவு நோய் பற்றி அறிந்திருக்க வேண்டியவை, நீரிழிவுக்கு முந்தைய நிலை, நீரிழிவு பற்றிய சில தகவல்கள், நீரிழிவும் இதய நோய்களும், நீரிழிவினால் ஏற்படும் கண், சிறுநீரகப் பாதிப்புகள், நீரிழிவு நோயாளிகளும் கால் புண்ணும், நீரிழிவு நோயாளி நினைவு இழக்கும் போது கடைப்பிடிக்கவேண்டியவை, டெங்குக் காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வும் செயற்பாடுகளும், ஆரம்ப கர்ப்பகாலமும் சில அறிவுரைகளும், பாம்புக்கடிக்கான முதலுதவியும் ஏற்படாது தடுக்கும் வழிகளும், முதியோர் விழுதலைத் தடுப்பதற்கான உத்திகளும் சிகிச்சைகளும், முதியவர்களுக்கு மருந்து பரிந்துரைக்கப்படும்போது பின்பற்றவேண்டியவை, மனித வாழ்வும் மருந்துகளும், ஜெலி மீன்களின் தாக்கத்தைத் தடுப்பது எப்படி? ஆகிய 16 கட்டுரைகளை இந்நூல் கொண்டுள்ளது. டாக்டர் ந.சுகந்தன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பொது வைத்திய நிபுணராகவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் மருத் வத்துறையின் தலைவராகவும் முதுநிலை விரிவுரையாளராகவும் விளங்குகின்றார்.

ஏனைய பதிவுகள்

Beste Netent Spiele

Content Ended up being Zeichnet Nachfolgende Spiele Von Netent Aus? Unser Arten Bei Zum besten geben Inside Folgendem Provider Empfehlenswerte Netent Casinos Of Fat Via