15352 யோக வாழ்வு (இதழ் 4).

நவரத்தினம் முரளீதரன், கந்தப்பு இறைவன் (இதழாசிரியர் குழு). கனடா: கிரியா பாபாஜி அன்பகம், 1வது பதிப்பு, ஜனவரி 2021. (கொழும்பு 13: கீதா பதிப்பகம்).

(12), 120 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×15சமீ.

யோக வழி நிற்றலால் ஏற்படும் விழிப்புணர்வின்மூலம், இன நல்லுணர்வை அறநெறி நின்று வளர்த்தெடுக்கும் அகப்பயணத்திற்கு பாதையமைக்கும் இதழ். இவ்விதழில் சர்வதேச யோக தினம்-யோகநெறியின் வழி (முரளீதரன் நவரத்தினம்), கர்ம யோகம் (யோக வைத்திலிங்கம்), ஆனந்த சுரப்பியை வளமாக்கும் யோகக் கலைகள் (எஸ்.பாலசுப்பிரமணியம்), மனித உடலும் இயற்கையும் பற்றிய பாபாஜியின் கருத்துக்கள் (சுசீந்திரன்), இயற்கையுடன் இணைந்த யோகவாழ்வு (செ.ஜெகதீஸ்வரி), கூட்டுப் பண்ணையால் கூடி வாழலாம் (க.இரத்தினராஜசிங்கம்), போகர் சித்தரின் சித்துக்கள் (ல.இறைவன்), திருமந்திரத்தில் அட்டாங்க யோகம் (சாமித்தம்பி பொன்னுத்துரை), இயற்கை உணவும் யோகாசனமும் (வே.திருநீலகண்டன்), சித்த மர்ம மருத்துவமும் யோக வாழ்வும் (சிவலிங்கம் ஜெயறஜீன்), நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் யோகாசனம் (மா.ஜெகநாதன்), உயர் இரத்த அழுத்தத்திற்கான யோக நிவாரணம் (சுபா நகுலானந்தன்), பாபாஜியின் கிரியா யோகம் (பொ.இந்திராணி), கிரியா பாபாஜியும் கிரியாயோகமும் (தயாநிதி கனகேஸ்), சிவத்தின் மொழி அன்பு (முரளீதரன் நவரத்தினம்), சர்வதேச யோகாதினம் (க.இறைவன்) ஆகிய ஆக்கங்கள் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Rating 45M Free Coins

Posts Zero down load necessary – slot Fruit Cocktail Gamble 100 percent free slots and you can victory a real income A lot more Required