சுப்பிரமணியம் ரவிராஜ். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2021. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
28 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-721-9.
பொது மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் சத்திரசிகிச்சை நிபுணர் ஒருவரால் எழுதப்பட்டுள்ள மருத்துவ நூல் இது. சத்திர சிகிச்சை பற்றிய விளக்கங்கள் மற்றும் சத்திரசிகிச்சை வழிமுறைகள், அவை எவ்வாறு பாதுகாப்பாக நிறைவேற்றப்படுகின்றன. சத்திரசிகிச்சையொன்றின்போது நோயாளர் கடைப்பிடிக்க வேண்டிய படிமுறைகள் என்பன குறித்து சாதாரண பொதுமக்களும் எளிதாக விளங்கிக் கொள்ளத்தக்க வகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. சத்திர சிகிச்சை பற்றிய அறிமுகம், சத்திர சிகிச்சைக்கு முன்பாக மேற்கொள்ளும் தயார்ப்படுத்தல், சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படும் சந்தர்ப்பங்கள் பற்றிய குறிப்பு, சத்திர சிகிச்சைக்கு முன்னர் நோயாளியின் மனோநிலையைத் தயார்ப்படுத்தல், சத்திர சிகிச்சையும் நோவும், சத்திர சிகிச்சைக்கு நோயாளியைத் தயார்ப்படுத்தல், சத்திர சிகிச்சையின் பின் நோயாளி கடைப்பிடிக்க வேண்டிய பொது நியதிகள், நிறைவுரை ஆகிய எட்டு அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பேராசிரியர் சு.ரவிராஜ் தனது மருத்துவப் பட்டத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திலும் சத்திரசிகிச்சைத் துறையில் ஆனு பட்டத்தினை கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவத்திற்கான பட்டப் பின்படிப்பு நிலையத்திலும் பெற்றவர். தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் பீடாதிபதியாகவும் சத்திர சிகிச்சைத் துறைப் பேராசிரியராகவும் பணியாற்றுகிறார்.