15355 கொரோனா.

மு.வு.சுந்தரேசன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2021. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

viii, 88 பக்கம், புகைப்படங்கள், விளக்கப்படங்கள், விலை: ரூபா 400., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-752-3.

தமிழ் பேசும் மக்களிடையே கொரோனா நோய் பற்றிய ஒரு விழிப்புணர்வைக் கொண்டுவரும் நோக்கிலும், கொரோனா பற்றிய தவறான கருத்துகளுக்கு விடையளிக்கும் எண்ணத்துடனும் இந்நூலை ஆசிரியர் எழுதியுள்ளார். இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் உயர்தர மருத்துவ சஞ்சிகைகள் மற்றும் உலக சுகாதார ஸ்தாபனம் போன்றவற்றில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவை. நவீன மருத்துவக் கருத்துகள் மட்டுமன்றி சித்த ஆயுர்வேத மருத்துவத்தின் முக்கியத்துவமும் இங்கு வெளிக்காட்டப்பட்டுள்ளது. கொரோனா நோய், கொரோனா (ஊழஎனை-19) நோயின் வரலாறும் அது உலகளாவிய ரீதியில் ஏற்படுத்திய பாதிப்பும், கொரோனா வைரசுக்கள் எவ்வாறு பரவுகின்றன? கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் முறைகள் எவை? கொரோனா நோயின் அறிகுறிகள் எவை? தொற்று எவ்வாறு உறுதிப்படுத்தப்படுகிறது? கொரோனா நோய்க் கிருமியின் வாழ்க்கை வட்டமும் அது உடலில் தொழிற்படும் விதமும், கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் எவ்வாறு சிகிச்சையளிக்கப்படுகிறார்கள்? உருமாற்றம் அடைந்த வைரஸ், தொற்று நோய்களில் இருந்து தப்பித்துக்கொள்ளும் வழிகள், பாரம்பரிய வைத்தியமுறைகளும் கொரோனா நோயும் ஆகிய 11 இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணரும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுகாதார பராமரிப்புப் பீடத்தின் முதுநிலை விரிவுரையாளருமாவார்.

ஏனைய பதிவுகள்