15356 கொவிட் தொற்றும் பாதுகாப்பும்.

ஜிப்ரி அஹமத் ஹஸ்மி ஷஹீர். கொழும்பு: ஜிப்ரி அஹமத் ஹஸ்மி ஷஹீர், (மாணவர்), இலங்கை திறந்த பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 2021. (அச்சக விபரம் தரப்படவில்லை).

37 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ., ISBN: 978-624-97229-0-3.

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சமூக விஞ்ஞானம் கற்கும் ஒரு மாணவனான இந்நூலாசிரியர் சமூக விஞ்ஞான பீடத்தின் பேராசிரியர் சந்திரபோஸ் அவர்களின் வழிகாட்டலுடன் இந்நூலை ஆக்கியிருக்கிறார். கொரொனா தொற்று அச்சத்தில் இருந்து விடுபட்டு மக்கள் சாதாரண நிலைக்கு வரவேண்டும் என்பதே இந்நூலின் வருகையின் நோக்கமாகும். இந்நூலில் அறிமுகம், பொதுவான தடுப்பு நடவடிக்கைகள், உற்பத்திக் கைத்தொழில், அரச மற்றும் தனியார் அலுவலகங்கள், விருந்தோம்பல் துறைகள், உணவகங்களில் கடைப்பிடிக்க ஒழுங்குபடுத்தப்பட வேண்டிய நடைமுறைகள், பல்பொருள் அங்காடிகள், பொதுப் போக்குவரத்து, நிகழ்வுகள் மற்றும் வைபவங்களை ஒழுங்கமைத்தல், பொருளாதார நிலையங்கள், பல்கலைக்கழகங்கள் ஆகிய தலைப்புக்களில் இந்நூலில் விரிவான தொற்றுப் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் உள்ளடங்கியுள்ளன.

ஏனைய பதிவுகள்

15656 பகவத் கீதை காவியம்.

சுப்பிரமணியம் சிவலிங்கம். திருக்கோணமலை: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, 2017. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 261/1, திருமலை வீதி).  204 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×16 சமீ., ISBN: 978-955-4628-49-6.