15363 தொழிற்சாலைத் தொழில்நுட்பம்.

இலட்சுமணர் கோணேசவரதன். வட்டுக்கோட்டை:  இ. கோணேசவரதன், ‘தர்மபதி’, வட்டுக்கோட்டை மேற்கு, 1வது பதிப்பு, ஏப்ரல் 2017. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, கு.டு. 1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).

xv, 215 பக்கம், விலை: ரூபா 370., அளவு: 23×15.5 சமீ., ISBN: 978-955-38063-0-7.

க.பொ.த. உயர்தரத்தில் பயிலும் பொறியியல் பிரிவு மாணவர்களுக்காகத் தயாரிக்கப்பட்ட நூல். மெக்கானிக்கல் வரைதல், கோடுகளும் அதன் பிரயோகமும், Ellipse வேலைத்தள பாதுகாப்பு, இரும்புப் பட்டடை வேலை, வெளிப்புறம் கடினமாக்கல், வார்ப்பு வேலைகள், ஒட்டுவேலைகள், புள்ளியில் ஒட்டுதல், Gas Welding (எரிவாயு கொண்டு வெல்டிங் செய்தல்), மின்னியலில் ஒட்டுதல், Flat Welding வடிவம் வரைதல், கடைச்சல் பட்டடை, புரிகளும் அதன் வகைகளும், Worm cutting ஆணி மற்றும் முடிச்சுக்களின் தலைகளின் விட்டம் கணக்கிடல், Shaping Machine, Planer, Horizontal Boring Machine, Milling Machine, Spur Gears, Helical Gear, Spiral Gear, Spline Shaft, Worm and Gear, Sprocket Wheel, Block Centre Chain and Sprocket, இணைப்புக்களும் கட்டையும் கலந்த சங்கிலி, Bevel Gear, Cam Cutting, துளையிடும் இயந்திரம், வெளிப்பரப்பை அரைத்தல், திருப்பல் தண்டினை அரைத்தல், இணைப்புக்கள், ஹைட்ரோலிக்ஸ் செயற்பாடுகள், பம்புகள், எஞ்சின், கிளச் தொகுதி, Transmission and Differential Assembly,  ஆகிய தலைப்புகளில் இந்நூலில் விளக்கங்கள் காணப்படுகின்றன. பின்னிணைப்பாக, Fraction, Decimals in Inch and Metric Conversion அட்டவணையும் தரப்பட்டுள்ளது. நூலாசிரியர் அம்பாறை ஹாடி இஞ்சினியரிங் கல்லூரியிலும் ஆற்றுப் பள்ளத்தாக்கு அபிவிருத்தி சபையின் தொழிற்சாலையிலும் இயந்திரவியல் தொழிற்றுறைகளில் பயிற்சி பெற்றதுடன் கட்டுபெத்த வளாகத்தில் பகுதி நேர வகுப்பில் மெக்கானிக்கல் இஞ்சினியரிங் கற்கை நெறியைக் கற்றுத் தேர்ந்தவர்.

ஏனைய பதிவுகள்

Kelly Standard Calculator

Posts Marathonbet esports bonus – Precisely what does For each and every Gaming Calculator Manage? Find Your Bets The brand new User Extra Fractional Opportunity