15364 கமக்காரர்களின் சமூக, பொருளாதார நிலையின் மீது புகையிலைப் பயிர்ச்செய்கைக்கு எதிராக மாற்றுப் பயிர்ச்செய்கையின் தாக்கம்.

எச்.எம்.எஸ். பிரியநாத், எஸ்.எம். ரணசிங்க பண்டார, எம்.ஏ.டீ. நிசங்க ஆரியசேன (மூலம்), லீலா ஐசாக் (தமிழாக்கம்). கொழும்பு 3: புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபையின் வெளியீடு, நாட்டா புளூம்பர்க் கருத்திட்டம், 23/B, பன்சலை ஒழுங்கை, 1வது பதிப்பு, 2011. (அச்சக விபரம் தரப்படவில்லை).

vi, 41 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ.

நான்கு அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ள இந்நூலின் முதலாம் அத்தியாயத்தில் முகவுரை, பின்னணி, ஆய்வின் நோக்கங்கள், முறைமையியல், ஆய்வின் மட்டுப்படுத்தல்கள் ஆகிய தலைப்புகளில் இவ்வாய்வின் அறிமுகம் அமைந்துள்ளது. இரண்டாம் அத்தியாயத்தில் முன்னாள் புகையிலைக் கமக்காரர்களின் சமூக பொருளாதார நிலை விபரிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் அத்தியாயத்தில் கமக்காரர்களின் சமூக, பொருளாதார நிலை மீது புகையிலையினதும் மாற்றுப் பயிர்ச் செய்கையினதும் தாக்கம் பற்றி விரிவாக ஆராயப்பட்டுள்ளது. இங்கு கமக்காரர்களினால் புகையிலைச் செய்கை ஆரம்பிக்கப்பட்டதற்கும் இடைநிறுத்தப்பட்டதற்குமான காரணங்கள், புகையிலைச் செய்கையை நிறுத்தி மாற்றுப் பயிர்களுக்கு நகர்தல், கமக்காரர்களினால் பண்டங்கள், சேவைகள் பயன்படுத்தலின் மீது புகையிலை மற்றும் மாற்றுப் பயிர்ச் செய்கையின் தாக்கம், கமக்காரர்களின் குடித்தன, மரத்தளபாடங்கள் மற்றும் மின்சார உபகரணங்கள் கொள்வனவு மீது புகையிலையினதும் மாற்றுப் பயிர்களினதும் தாக்கம்,  கமக்காரர்களின் வீடமைப்பு நிலை மீது புகையிலை மற்றும் மாற்றுப் பயிர்ச்செய்கையின் தாக்கம், நிலையான சொத்துக்களை தேடிப்பெறுவதற்கான கமக்காரர்களின் தகுதி மீது புகையிலை மற்றும் மாற்றுப் பயிர்ச்செய்கையின் தாக்கம், கமக்காரர்களின் சேமிப்பு ஆற்றல் அளவு மீது புகையிலை மற்றும் மாற்றுப் பயிர்ச் செய்கையின் தாக்கம், புதிய வியாபாரங்களில் மூலதனம் இடுவதற்கான ஆற்றல் அளவு மீது புகையிலை மற்றும் மாற்றுப் பயிர்ச்செய்கையின் தாக்கம், கமக்காரர்களின் சமூகத் தளங்களில் புகையிலை மற்றும் மாற்றுப் பயிர்ச் செய்கையின் தாக்கம் (பிள்ளைகளின் கல்வி மீதான தாக்கம், சுகாதார நிலை, சமூக உறவுகள் மீதான தாக்கம், சூழலின் மீதான தாக்கம்) என ஒன்பது விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன. இறுதியாக 4வது அத்தியாயத்தில் முடிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் தரப்பட்டுள்ளன. (இந்நூல் சுன்னாகம் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21096).

ஏனைய பதிவுகள்

step three Reel Slots

Content Reel ’em Inside the Slot machine Better Online game Global Harbors Local casino Ports Extra: Online casino Bonus Revolves Research Of the Simplest Video