றாகிலா மஜீத் நூன். கிண்ணியா-3: பேனா பப்ளிக்கேஷன்ஸ், 92/4, உமர் ரலி வீதி, மஹ்ரூப் நகர், 1வது பதிப்பு, 2016. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).
48 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 22.5×15.5 சமீ., ISBN: 978-955-0932-19-1.
முள்ளிப்பொத்தானை கிராமத்தைச் சேர்ந்தவரும் ஹாஜியானி கலாபூஷணம் இலக்கிய வித்தகர் ஆகிய பட்டங்களைப் பெற்றவருமான றாகிலா மஜீத் நூன் அவர்கள், தனது அனுபவபூர்வமான கருத்தக்களை இலங்கை வானொலியில் சுமார் 15 வருடங்களுக்கு முன்னர் வானொலி உரைகளாகத் தந்திருந்தார். அவற்றின் தேர்ந்த தொகுப்பே இந்நூலாகும். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம், வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடம், அன்பளிப்புச் செய்வதிலும் அவதானம் தேவை, வருவாய்க்குத் தக்கபடி வாழப் பழகுவோம், மரியாதை கொடுத்து மரியாதை வாங்கு, அன்பின் எல்லை அன்னை தந்தையரே, குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு, தீர விசாரிப்பதே சிறந்தது, மாணவர்கள் ஆசிரியர்கள் மீது வைத்திருக்கும் நன்மதிப்பு, தாலி பெண்ணுக்கு வேலி, நாக்கின் நோக்கு, பெண்களாகிய நாம் கவனித்து நடக்கவேண்டிய சில அவதானங்கள், அன்பிலார் எல்லாம் தமக்குரியர், ஆள்பாதி ஆடைபாதி, அகத்தின் அழகு முகத்திற் தெரியும், பொறாமை கொள்ளாதே, விருந்தினரை விருப்பத்தோடு உபசரியுங்கள், பகை கொண்ட உள்ளம் துயரத்தின் இல்லம் ஆகிய தலைப்புகளில் பெண்களுக்கான அனுபவபூர்வமான ஆலோசனைகளை இந்நூல் வழங்குகின்றது.