15369 சர்வோதய பண்ணை முகாமைத்துவம்.

சர்வோதய கிராமிய தொழில்நுட்ப சேவை. மொரட்டுவை: இலங்கை சர்வோதய சிரமதானச் சங்கம், தம்சக் மந்திர, ராவத்தாவத்தை, 1வது பதிப்பு, டிசம்பர் 1981. (அச்சக விபரம் தரப்படவில்லை).

40 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 27.5×21.5 சமீ.

இந்நூல் பண்ணை முகாமைத்துவம் பற்றிய சர்வோதய தொண்டர்களுக்கான கைந்நூலாகும். இதில் அறிமுகம், வளங்களை மதிப்பிடல், தீர்மானங்களை எடுத்தல், கட்டமைத்தலும் மேற்பார்வை செய்தலும், பண்ணைஅபிவிருத்திக்கான வரவு செலவுத் திட்டம், உற்பத்திச் செலவு கணக்கீடு, பயிர் உற்பத்தியின் பொருளாதாரம், ஒரு பயிர் உற்பத்தி வரவு செலவுத் திட்டம் தயாரித்தல், வருடாந்த பண்ணை வரவு செலவு ஆகிய ஒன்பது அத்தியாயங்கள் உள்ளன. பின்னிணைப்புகளாக வேலைத் திட்டத்தை திட்டமிடுவதற்கும் கட்டமைப்பதற்கும் உபயோகிக்கப்படும் ஒப்பீட்டு அட்டவணை, வெவ்வேறு பயிர் உற்பத்திக் கருமங்களுக்கான தொழிலாளர் தேவைகள், உழவு இயந்திரம், நீரிறைக்கும் இயந்திரம் ஆகியவற்றிற்கான செலவு, விதைத் தேவையும் செலவும், பண்ணை ஏடுகள் ஆகிய ஐந்து இணைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. (இந்நூல் புங்குடுதீவு சர்வோதய மத்திய நிலைய நூலகத்தில் பார்வையிடப்பட்டது).

ஏனைய பதிவுகள்

Quale Funziona Il Bonus Bet365

Content Vero gioco d’azzardo online Rise of Ra | Sbattere Le Scommesse Sportive Asportazione Pokerstars La Battaglia D’inghilterra Anche Le Decisioni Di Hitler Il davanti