தா.சனாதனன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2020. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
vi, 141 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 650., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-705-9.
தென்னாசியாவின் நவீனத்துக்கு முற்பட்ட கலை பற்றிய கருத்தாடலையும் நவீன வாதத்துக்கு உட்பட்ட மற்றும் பிற்பட்ட கலைகள் பற்றிய கருத்தாடலையும் பயில்வையும் கட்டியமைப்பதில் மேலைத்தேய நவீனவாதத்திற்கு முக்கிய பங்குண்டு. அந்த வகையில் தென்னாசிய, உள்நாட்டு கலைப் பயில்வுகளைப் புரிந்துகொள்வதற்கு நவீனவாதக் கலையின் சர்வதேச வேலைத்திட்டத்தைப் புரிந்துகொள்வது தவிர்க்கமுடியாததொன்று. இந்நிலையில் மேலைத்தேயத்தில் ஓவியம், சிற்பம், கட்டடம் ஆகிய காண்பியக் கலைகளுக்கு நவீனத்துவத்தால் ஏற்பட்ட மாற்றங்களைத் தமிழில் சுருக்கமாக இந்நூல் முன்வைக்கின்றது. மேலைத்தேய நவீனவாதக் கலைப்போக்கைப் புரிந்துகொள்ள அடிப்படையாக அமையும் முக்கியமான எண்பத்தியேழு படைப்புக்களையும் 68 படைப்பாளிகளையும் மற்றும் 22 இயக்கங்களையும் போக்குகளையும் அவற்றின் சமூக வரலாற்றுடன் இணைத்து வாசிப்பதினூடாக நவீனவாதத்தை ஒரு வரலாற்றுத் தேவையாகவும் நிர்ப்பந்தமாகவும் இந்நூல் அறிமுகம் செய்கின்றது. நவீனவாதம் பற்றிப் பொதுவாகவும் மேலைத்தேய நவீனவாதம் பற்றி குறிப்பாகவும் அறியமுயலும் வாசகனின் தொடர்ந்த தேடலுக்கான வலுவான அடிப்படையை வழங்குவது இந்நூலின் நோக்கமாகும். தாமோதரம்பிள்ளை சனாதனன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையில் கலை வரலாற்று விரிவுரையாளராகப் பணியாற்றுகின்றார்.