15374 இலங்கைக் கலை: க.பொ.த.உயர்தரம்.

ஏ.எஸ்.சற்குணராஜா. பருத்தித்துறை: எஸ். பதிப்பகம், வியாபாரி மூலை, 1வது பதிப்பு, நவம்பர் 2019. (கொழும்பு 13: தேவி பிரின்டர்ஸ்).

viii, 342+32 பக்கம், புகைப்படங்கள், சித்திரங்கள், விளக்கப்படங்கள், விலை: ரூபா 700., அளவு: 22×16 சமீ., ISBN: 978-955-705-367-7.

க.பொ.த. உயர்தர சித்திரக்கலை, புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாகவும் வர்ணப்படங்கள் சகிதமும் வெளியிடப்பட்டுள்ளது. தரம் 12இற்குரிய பாடங்களில் இலங்கைக் கலைச் சங்கதத்திற்குரிய கலைஞர்கள், இலங்கையின் வரலாற்றிற்கு முற்பட்ட ஓவியங்கள் என்பன தனித்தனியே தெளிவாக விளக்கப்படுத்தப்பட்டுள்ளன. தரம் 13இற்குரிய பாடங்களில் மேலதிகமாக, ஹரி பீரிஸ், ஐவன் பீரிஸ், ஜஸ்டின் தரனியகல, ரிச்சர்ட் கப்ரியால், மஞ்சுசிறீ, ஜோர்ஜ் கீத், ஜெப்ரி பீலிங், எஸ்.ஆர்.கனகசபை, கே.கனகசபாபதி, யாப்பஹ{வ, ஸ்டான்லி அபேசிங்ஹ, எச்.ஏ.கருணாரத்ன, திஸ்ஸ ரணசிங்க, ஏ.மாற்கு, கடலாதெனிய விகாரை, கம்பளை லங்காதிலக்க விகாரை, எம்பக்க தேவாலயம், பனாவிட்டிய மடம் ஆகியவை தனித்தனிப் பாடங்களாக விளக்கப்பட்டுள்ளன. நூலாசிரியர் சித்திர பாடம்  தொடர்பான தனது தேடுதலின்மூலம் பெறப்பட்ட பல்வேறு விடயங்களையும் ஆசிரியர்களும் மாணவர்களும் அறிந்து பயன்பெறும் வண்ணம் இந்நூலை எழுதியுள்ளார். இந்நூலாசிரியர் வடமராட்சியின் வியாபாரி மூலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தற்போது வடமாகாணக் கல்வித் திணைக்களத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றுகின்றார்.

ஏனைய பதிவுகள்