15377 கடந்த காலமும் கழிவிரக்கமும்: மு.கனகசபையின் ஓவியங்களின் தொகுப்புக் காட்சி.

கலை வட்டம் குழுவினர். யாழ்ப்பாணம்: நுண்கலைத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2005. (அச்சக விபரம் தரப்படவில்லை).

12 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×20 சமீ.

யாழ்ப்பாணம் கொழும்புத்துறையைச் சேர்ந்த ஓவியர் முத்தையா கனகசபை நம்மிடையே ஆசிரியராகவும் ஓவியராகவும் நன்கறியப்பட்டவர். கன்வஸ் தைல வர்ணத்தில் சிறப்பான ஓவியங்களை வரைந்துள்ளவர். இவரது ஓவியங்களின் கண்காட்சியொன்றினை யாழ். பல்கலைக்கழக நுண்கலைத்துறையினர் 2005, ஒக்டாபர் 15 முதல் 18 வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் ஒழுங்குசெய்திருந்தார்கள். அந்நிகழ்வின் போது இச்சிறு கைந்நூல் வெளியிடப்பட்டது.

ஏனைய பதிவுகள்

16467 அரூப நிழல்கள்.

சங்கரி சிவகணேசன். யாழ்ப்பாணம்: சிவசங்கரி சிவகணேசன், ஈஸ்வரிபுரி, புத்தூர் கிழக்கு, புத்தூர், 1வது பதிப்பு, ஜீலை 2022. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி). 120 பக்கம், விலை: ரூபா