15381 விம்பம்: ஓவிய நூல்.

ஆசை இராசையா. யாழ்ப்பாணம்: ஆசை வெளியீடு, 36, பண்டாரக்குளம் மேற்கு வீதி, நல்லூர், 1வது பதிப்பு, 2019. (யாழ்ப்பாணம்: எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).

xii, 264 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: ரூபா 5000., அளவு: 31×22 சமீ., ISBN: 978-955-43640-0-4.

ஈழத்தின் புகழ்பூத்த ஓவியர் ஆசை இராசையா (அச்சுவேலி, 16.08.1946-07.07.2020) அவர்களுடைய ஓவியங்களின் கண்காட்சி 02.11.2019 அன்று சாவகச்சேரி, T.P ஹன்ற் ஞாபகார்த்த கலைக்கூடத்தில் நடைபெற்றபோது அவரின் ஓவியங்கள் அடங்கிய விம்பம் ஓவிய நூல் வெளியிடப்பட்டது. ஊற்றுக்கண் என்ற பிரிவில் ட்ரொஸ்கி மருது, தா.சனாதனன், ஆசை இராசையா ஆகியோர் எழுதிய ஓவியம் சார்ந்த கருத்துரைகளுடன், முகை, மொட்டு, போது, மலர், துலங்கல், வண்ண முதலுரு (Colour Plates), சுவடுகள், குடயளாடியஉம, கடப்பாடு ஆகிய பிரிவுகளின் வாயிலாக ஓவியர் ஆசை இராசையாவின் ஓவிய உலகம் விரித்துரைக்கப்பட்டுள்ளது. அவரது கண்கவர் வண்ண, ஓவியங்களின் தொகுப்பாகவும் இப்பாரிய நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஈழத்து இயற்பண்புவாத ஓவியச் செல்நெறிகளில் தனித்துவம் மிக்கவராக இணையற்ற கலைத்துவ ஆளுமையைக் கொண்ட கலைஞராக தன்னை அடையாளப்படுத்தி நின்றவர் ஓவியர் ஆசை இராசையா. பிறப்பு முதல் 1965 வரை அச்சுவேலியில் வாழ்ந்தவர். அச்சுவேலி மத்திய கல்லூரியின் பழைய மாணவர். கொழும்பு நுண்கலைக் கல்லூரியில் (College of Art and Craft) அனுமதி பெற்று 1966 தொடக்கம் 1969 வரையான காலப்பகுதியில் ஓவிய நுட்பங்களைப் பயின்றார். யாழ். பல்கலைக்கழகத்தில் உள்ள பேராசிரியர் சு.வித்தியானந்தன், பேராசிரியர் மகேஸ்வரன் ஆகியோரின் மெய்யுருக்களும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் உள்ள பசுபதிச் செட்டியார், நாகலிங்கச் செட்டியார் மற்றும் இந்துவின் அதிபர்களது மெய்யுருக்களும் இவரது கைவண்ணத்தில் உருவானவை என்பது குறிப்பிடத்தக்கது. 1971 இல் வேலணை மத்திய கல்லூரியில் சித்திரபாட ஆசிரியராக நியமனம் பெற்ற இவர் பலாலி ஆசிரிய கலாசாலையில் பயிற்சி பெற்று 1975 தொடக்கம் 1983 வரை கொழும்பு றோயல் கல்லூரியில் பணியாற்றினார். இலங்கை முத்திரைப் பணியக ஓவியக் குழுவில் இடம்பெற்றிருந்த இவர், இலங்கை அரசின் எட்டு முத்திரைகளுக்கான ஓவியங்களை வரைந்துள்ளார். சேர். பொன். இராமநாதன், சேர். பொன். அருணாசலம், சேர். வைத்திலிங்கம் துரைசுவாமி, சேர்.ஜோன் கொத்தலாவல, ஜோர்ஜ் ஈ.டி. சில்வா, ஈ.பி. மல்லசேகரா ஆகியோரது மெய்யுருக்களும் ‘தவலம்” என்ற மலையகப் போக்குவரத்து மார்க்கம், இலங்கையின் முதற் புகைவண்டி ஓவியம் என்பனவுமே அவையாகும். ஓவியத்துறை சார்ந்து பல பட்டங்களையும் விருதுகளையும் ஆசை இராசையா பெற்றுள்ளார். நல்லூர் பிரதேச செயலகம் வழங்கிய கலைஞானச் சுடர் (2009), வடமாகாண ஆளுநர் விருது (2009), கலாபூஷணம் விருது (2010), கொழும்புத் தமிழ்ச் சங்க விருது (2012), ஞானம் சஞ்சிகை விருது (2012), எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் ‘தமிழியல் விருது’ (2013), திருமறைக் கலாமன்றம் வழங்கிய கலைஞானபூரணன் விருது (2014) என்பன குறிப்பிடத்தக்கனவாகும்.

ஏனைய பதிவுகள்

Møde Eftervarme Bulgarske Kvinder

Content Dating I kraft af Aldeles Dansker Damemenneske: Hvad Virk Barriere Vide, Føren Man Begynder Friktionsvarme Thailandske Kvinder: Blive 20 Berømte Skønheder Beløbe sig til