வீ.அரசு. சென்னை 600041: தடாகம், 112, திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர், 1வது பதிப்பு, பெப்ரவரி 2021. (அச்சக விபரம் தரப்படவில்லை).
44 பக்கம், விலை: இந்திய ரூபா 50.00, அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-88627-29-0.
கருணாமிர்தசாகரம், யாழ்நூல் என்ற இரண்டு முதன்மையான இசையியல் ஆய்வு நூல்களை ஆபிரகாம் பண்டிதரும் விபுலானந்தரும் முறையே உருவாக்கினார்கள். தமிழகப் பண்பாட்டுக் களத்தில் இசை வரலாறு குறித்த மீள் கண்டுபிடிப்புகளை இவர்கள் செய்தார்கள். இதனை மேலும் மேலும் முன்னெடுக்கும் தமிழ்ச் சூழல் இருப்பதாகக் கூறமுடியவில்லை. இவ்விரண்டின் பாடுபொருள், அது உருவான வரலாறு ஆகிய பல செய்திகளை இக்குறுநூல் பேசுபொருளாகக் கொண்டுள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத்துறையில் முப்பது ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியவர் முனைவர் வீ. அரசு. 16.09.2017 அன்று மட்டக்களப்பு-இலங்கை விபலானந்தர் நுண்கலை ஆய்வு மையத்தில் முனைவர் நிகழ்த்திய உரையின் எழுத்து வடிவம் இது. வீ.அரசுவின் காணொளி உரை வரிசைத் தொடரில் பத்தாவது பிரசுரமாக வெளிவந்துள்ளது.