இ.சு.முரளிதரன் (தொகுப்பாசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஆடி 2021. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
iv, 48 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-624-5881-06-2.
இளையராஜாவும் புல்லாங்குழலும் (இ.சு.முரளிதரன்), இசைஞானியும் வயலினும் (ஜெயபாரதி கௌசிகன்), இளையராஜாவின் பாடல்களில் வீணை (வெற்றி துஷ்யந்தன்), இசையின் லப் – டப் (த.ஜெயசீலன்), இளையராஜாவின் இசையில் நாதஸ்வரம் (யாத்ரிகன்), இளையராஜாவின் இசையில் மிருதங்கம் (த.பார்த்தீபன்), இளையராஜாவின் இசையில் மேளதாளம் (கானா பிரபா), இளையராஜாவின் இசையில் ‘ட்ரம்ஸ்’ (மா.செல்வதாஸ்), இளையராஜாவின் இசையில் தபேலா (ந.குகபரன்), இளையராஜாவும் ஹார்மோனியமும் (புலோலியூர் வேல்நந்தகுமார்) ஆகிய பத்து கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. இவை அவ்வப்போது ஜீவநதியில் பிரசுரிக்கப்பட்டவை. இந்நூலுக்கான முகப்போவியம் தமிழகத்தின் சேலத்தைச் சேர்ந்த ஓவியர் கே.பரந்தாமன் அவர்களால் உருவாக்கப்பட்டது. அதில் பல்வேறு இசைக் கருவிகளின் துணைகொண்டு இசைஞானி இளையராஜாவின் முகத்தை கணனியின் உதவியுடன் அவர் உருவாக்கியிருக்கிறார். இந்நூல் 196ஆவது ஜீவநதி பிரசுரமாக வெளியீடு கண்டுள்ளது.