15389 உலகம் உவப்ப.

இராசையா தனராஜ். பொகவந்தலாவ: நடனக் கழல், கொட்டியாகலை மேற்பிரிவு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2020. (யாழ்ப்பாணம்: கக்ஸ்ரொன் பிரின்டர்ஸ், கல்வியங்காடு).

xvi, 113 பக்கம், விலை: ரூபா 398., அளவு: 23.5×17 சமீ., ISBN: 978-624-96656-0-6.

ஐந்த நடன நாடகங்களின் அறிமுகத்துடன் தொடங்கும் இந்நூலில் பொருளதிகாரம், செந்நெறிச் செந்நூல், தேவன் எங்கே, உத்தமத் துறவி, ஆகமம் ஆகி நின்றார் ஆகிய ஐந்து நடன நாடகங்களின் எழுத்துருக்களும் இடம்பெற்றுள்ளன. நடனத்துறையில் கல்வி பயின்றோரில் தொடர்ச்சியாக நடனக் கலைஞராக இயங்கும் ஒரு சிலருள் தனராஜீம் ஒருவர். நடனத்துறையின் மேடைகள் பலவற்றை பிரதான பாத்திரங்களை ஏற்றுச் சிறப்பித்தவர். ஆற்றுகைத் திறனும் ஆக்கத்திறனும் ஒருங்கே கைவரப் பெற்றவர். நடனத்துக்கேற்ற சாகித்தியங்களையும் நடன நாடகங்களையும் எழுதும் கவித்துவமும் கைவரப் பெற்றவர் இவர். இவரது திறமை இந்த நடன நாடக நூலில் வெளிப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Gambling establishment Incentives

Content Play bingo billions slot online no download: Current Pro Free Spins No-deposit Comparable Bonuses On the 40 Exclusive Totally free Revolves No deposit Added