15390 அண்ணாவி இளைய பத்மநாதன்: தமிழ்ச் சூழல்-சிலப்பதிகார அரங்கத் திறம்.

வீ.அரசு. சென்னை 600041: தடாகம், 112, திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர், 1வது பதிப்பு, பெப்ரவரி 2021. (அச்சக விபரம் தரப்படவில்லை).

40 பக்கம், விலை: இந்திய ரூபா 40.00, அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-88627-27-6.

சிலப்பதிகாரம் எனும் பிரதி பல பரிமாணங்களை உள்ளடக்கியது. தமிழர் சமூக வரலாறு, தமிழிசை வரலாறு, தமிழ்க் கலை வரலாறுகள், தமிழ் அரங்க வரலாறு எனப் பல துறைகள் குறித்த உரையாடல்கள் நிகழ்த்த ஏதுவான பிரதி சிலப்பதிகாரம். ஈழத்தவரான இளைய பத்மநாதன் தமிழ் அரங்க வரலாறு எனும் புலத்தில் சிலப்பதிகாரம் தொழிற்படும் பரிமாணங்களை விரிவாக ஆய்வு செய்துள்ளார். தமிழ்ச் சமூகத்தில் சிலப்பதிகாரம் காலம்தோறும் உள்வாங்கப்பட்ட வரலாறும் இப்போது பத்தண்ணா அரங்க மரபாக உள்வாங்கியுள்ள வரலாறும் இக்குறுநூலின் பேசுபொருள். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத்துறையில் முப்பது ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியவர் முனைவர் வீ. அரசு. 31.08.2019 அன்று காணொளி வடிவத்தில் ஆற்றப்பட்ட உரையின் எழுத்து வடிவம் இது. வீ.அரசுவின் காணொளி உரை வரிசைத் தொடரில் எட்டாவது பிரசுரமாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

15298 கண்டிராஜன் ஒப்பாரி.

முருகு தயாநிதி (பதிப்பாசிரியர்). மட்டக்களப்பு: கலைப்பூக்கள் கலைக் கழகம், 1வது பதிப்பு, 2019. (மட்டக்களப்பு: எவகிறீன் அச்சகம், 185A, திருமலை வீதி).  x, (2), 83 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 18×13