15394 கூத்த யாத்திரை (நான் கொண்டதும் கொடுத்ததும்).

சி.மௌனகுரு. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2021. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xii, 214 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 600., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-742-4.

கூத்த யாத்திரை (நான் கொண்டதும் கொடுத்ததும்).

சி.மௌனகுரு. தமிழ்நாடு: பரிதி பதிப்பகம், 56 சீ 128, பாரத கோவில் அருகாமை, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டம் 635851, 2வது பதிப்பு, ஜனவரி 2022, 1வது பதிப்பு, 2021. (சென்னை: துர்க்கா பிரின்டர்ஸ்).

viii, 214 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 220., அளவு: 22×15 சமீ.

பேராசிரியர் சி.மௌனகுரு இந்நூலில், தான் பராயமறிந்த காலம்; தொட்டு கூத்துக்கலைக்கு அறிமுகமான பின்னணியையும், தனக்குக் கூத்தறிவூட்டிய அண்ணாவிமார்களையும், ஆசிரியர்களையும், அவர்களின் திறன்களையும் அறிமுகம் செய்கின்றார். அத்தோடு இக்கலையை பின்னாளில் தான் மட்டக்களப்பு, கொழும்பு, யாழ்ப்பாணம், மலைநாடு என்று இலங்கையின் பல பகுதிகளிலும் வாழ்ந்த இளம் தமிழ்த் தலைமுறைக்கும் சிங்களக் கலைஞர்களுக்கும் வெளிநாட்டவர்களுக்கும் கற்பித்தமையையும் அதன் விளைவாக எழுந்த நாடகங்களையும் இத்தொடர் செயலினூடாக காலம்தோறும் கூத்து பற்றிய தனது கருத்துக்களும் செயல் ஈடுபாடுகளும் மாறிவந்த வகையினையும் சுவையாகக் கூறுகின்றார். 1943ஆம் ஆண்டு தொடக்கம் 2011ஆம் ஆண்டு வரையான அவரது ‘கூத்த யாத்திரை’ இந்நூலில் கூத்தைக் கண்டமை, கூத்தைப் பழகியமை, பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கூத்துப் பழக்கியமை, பேராதனைப் பல்கலைக்கழகத்துக்கு வெளியே கூத்துப் பழக்கியமை, மட்டக்களப்பின் வடமோடி தென்மோடி ஆட்டங்களை மென்மேலும் அறிந்துகொண்டமை, யாழ்ப்பாணத்தில் கூத்துப் பழக்கியமை, கிழக்கில் சிங்கள மாணவர்க்கும் நோர்வேயில் பிறநாட்டவருக்கும் கூத்துப் பழக்கல், அனுபவங்களும் பயனும், நந்தவனத்திற்கு அழகு பல்வகைப் பூக்களே ஆகிய ஒன்பது அத்தியாயங்களில் பரந்து விரிகின்றது.

ஏனைய பதிவுகள்

Mega Queen Slot machine game

Posts Progressive Slots Will there be A no cost Spins Element Mode Within this Video game? Better 100 percent free Slot Casino games To try