15397 துரோகிகள்(நாடக மேடையேற்ற அறிமுக மலர்).

க.கணபதிப்பிள்ளை. பேராதனை: தமிழ்ச் சங்கம், பேராதனைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1956. (யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம், 226, காங்கேசன்துறை வீதி).

16 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ.

‘தவறான எண்ணம்’ என்ற நாடகத்தை 1954இலும், ‘சுந்தரம் எங்கே’ என்ற நாடகத்தை 1955இலும் மேடையேற்றிய பின்னர் 1956இல் ‘துரோகிகள்’ என்ற நாடகத்தை பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்ச் சங்கத்தினர் மேடையேற்றினார்கள். நாடகங்களின் மேடையேற்றத்துக்கான செலவினத்தை ஈடுசெய்யும் நோக்கில் ‘துரோகிகள்’ நாடகம் பற்றிய ஒரு அறிமுகப் பிரசுரத்தினை வெளியிட்டுள்ளார்கள். வர்த்தகர்களின் கட்டணம் செலுத்தப்பெற்ற விளம்பரங்களையும், நாடகம் பற்றிய பல்வேறு தகவல்களையும், அந்நாடகத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்கள் பற்றிய விபரங்களையும் நாடகத்தின் கதைச் சுருக்கத்தையும் உள்ளடக்கியதாக இச்சிறப்பு மலர் வெளியிடப்பட்டுள்ளது. பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை எழுதிய இந்நாடகத்தை கலாநிதி சு.வித்தியானந்தன் தயாரித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 53394).

ஏனைய பதிவுகள்

DISASTER Arena Spil Online Gratis!

Content Nordic Bet login casino | Parken og Pena-paladset pr. Sintra, Sintra: Hop-på-hop-af-bussen til slotte Fra 1998 Elementor sammendrag Et periode (eller autopsi) er endelig