பா.நிரோஷன். கொழும்பு 12: பீனிக்ஸ் பதிப்பகம், 136/1- E, 1ஆம் மாடி, டாம் வீதி, 1வது பதிப்பு, ஜீன் 2018. (கொழும்பு 12: பீனிக்ஸ் பதிப்பகம்).
x, 138 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 290.00, அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-7226-55-2.
இலங்கை கல்வித் துறையில் தரம் 9, 10, 11ஆம் வகுப்புகளுக்கான நாடகமும் அரங்கியலும் பாடத்திட்டத்திற்கு அமைவாக கேட்கப்படும் 1000 வினாக்களும் அவற்றுக்கான விடைகளும் இந்நூலில் உண்டு. இந்நூலில் அவை கலைகள், நாடகம், நாடகத் தோற்றம், அரங்கின் அடிப்படை மூலகங்கள், அரங்க விளையாட்டு, புதிதளித்தல், ஊமம், நாடக வகைகள், சிறுவர் நாடகம், நாடக எழுத்துரு, அரங்க நடிப்பு, சடங்கு அரங்குகள், தமிழ் நாடக வரலாறு, ஈழத்தமிழ் பிரதேச அரங்கு, இசை நாடகம், சிங்கள நாடக அரங்கு, ஆரொடு நோகேன், நெறியாழ்கை, நாடகத் தயாரிப்பு, அரங்க காட்சி விதானிப்பு, அரங்க இசை விதானிப்பு, அரங்கிற்கான அசைவு இயக்கம், வேட உடை விதானிப்பு, நாடக ஒப்பனை, அரங்க ஒளி விதானிப்பு, நாட்டிய சாஸ்திரம், ஈழத்து நாடக ஆளுமைகள், நாடக நிறுவனங்கள், நால்வகை அபிநயங்கள், புதியதொரு வீடு, நூல்களும் ஆசிரியர்களும் ஆகிய 31 பாடங்களின் கீழ் கேள்விகளும் அவற்றிற்கான பதில்களும்; ஒழுங்குபடுத்தித் தரப்பட்டுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 76634).