15405 போர்த்துக்கேயர் கால நவீன நாடகங்கள்.

ஞானமுத்து விக்டர் பிலேந்திரன். யாழ்ப்பாணம்: ஆயர் இல்லம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2008. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ். பிரின்டர்ஸ், சில்லாலை வீதி, பண்டத்தரிப்பு).

(2), 18 பக்கம், விலை: ரூபா 40.00, அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-96653-3-5.

போர்த்துக்கேயர் கால நவீன நாடகங்கள் பற்றிய முன்னுரையுடன் தொடங்கும் இவ்வாய்வு, சமயச் சடங்குகளும் நாடகங்களும், ஐரோப்பாவில் மறைசார் நாடகங்கள், திருவுருவங்கள், பாசோ (Passo), உடக்குப் பாஸ், நாடகங்களின் பயன்பாடு ஆகிய விடயங்களை விரிவாக விபரித்து நிறைவுரையுடன் முடிவடைகின்றது. முதுநிலை விரிவுரையாளரான ஞானமுத்து விக்டர் பிலேந்திரன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிறிஸ்தவ-இஸ்லாமிய நாகரிகத் துறைகளின் தலைவராகவும் பணியாற்றியவர். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18551).

ஏனைய பதிவுகள்

13379 இயற்கை: சுற்றாடல் மஞ்சரி: மலர் 5, இதழ் 3: ஜனவரி 1994.

H.M.R.P.ஹேரத் (பிரதம ஆசிரியர்), பி.முத்தையா (இணை ஆசிரியர்). கொழும்பு 4: சுற்றாடல் பாராளுமன்ற விவகார அமைச்சு, யுனிட்டி பிளாசா கட்டிடம், 1வது பதிப்பு, ஜனவரி 1994. (கொழும்பு: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்). (6), 54