15406 விலாசம்: தமிழ் நாடக வகை ஒன்று பற்றிய ஆய்வு.

சி.மௌனகுரு (ஆசிரியர்), சி.க.சிற்றம்பலம் (இதழாசிரியர்), சி.முருகவேள் (நிர்வாக ஆசிரியர்). யாழ்ப்பாணம்: கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, நவம்பர் 1984. (யாழ்ப்பாணம்: மகாத்மா அச்சகம், ஏழாலை மேற்கு, ஏழாலை).

பக்கம் 15-32, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23.5×17 சமீ.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தினரின் ஆய்வுச் சஞ்சிகையின் தொகுதி 2 (இதழ் 3) கார்த்திகை 1984இல் வெளியிடப்பட்டிருந்தது. இவ்விதழில் செ.பாலச்சந்திரன், ந.பேரின்பநாதன், சோ.கிருஷ்ணராஜா, ஆ.வேலுப்பிள்ளை, சி.க.சிற்றம்பலம் ஆகியோரின் கட்டுரைகளுடன், சி.மௌனகுரு அவர்கள் எழுதிய ‘விலாசம்’ தமிழ் நாடக வகை ஒன்று பற்றிய ஆய்வு என்ற தலைப்பில் ஒருஆய்வுக்கட்டுரையும் இடம்பெற்றிருந்தது. அவ்வாய்வுக் கட்டுரையின் அச்சகப் பிரதி (Off Print) தனி நூலாக பிரசுரிக்கப்பட்டுள்ளது. விலாசம் என்பது 19ஆம் நூற்றாண்டளவில் தமிழ் நாடக உலகில் வந்து புகுந்த ஒரு நாடக வடிவமாகும். இந்த விலாசம் என்ற பெயர் ஏன் வந்ததென்று தெளிவாகத் தெரியவில்லை. இதுவரை விரிவாக ஆராயப்படாததும் பெயர்க்காரணம் தெரியாததும் 19ஆம் நூற்றாண்டில் தமிழகத்திலும் ஈழத்திலும் பெருவாரியாக ஆடப்பட்டதுமான விலாசம் என்னும் நாடக வடிவத்தின் தோற்றம் பற்றியும் அத்தோற்றத்திற்கான காரணம் பற்றியும் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 1214).

ஏனைய பதிவுகள்

Chilli Reels Local casino

Posts Q ten Just what are No-deposit Incentive Requirements? Comparable Bonuses To your Bitstarz 29 100 percent free Spins Small print Of your Extra When