15408 சினிமாத் தடம்.

ஜி.ரி.கேதாரநாதன். ஐக்கிய இராச்சியம்: நிகரி வெளியீட்டாளர்கள், 19, Goodwood Way, Lincoln, LN60FZ,  இங்கிலாந்து, 1வது பதிப்பு, ஏப்ரல் 2021. (யாழ்ப்பாணம்: நியூ எவர்கிரீன் அச்சகம், 693, காங்கேசன்துறை வீதி).

212 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 22×14.5  சமீ., ISBN: 978-624-95985-0-8.

சினிமாத் தடம் என்ற தனது நூலில் கேதாரநாதன், உலகின் பல பாகங்களிலும் வெளியான தரமான பல திரைப்படங்களையும் அதை இயக்கிய நெறியாளர்களையும் அறிமுகம் செய்வதுடன் காத்திரமான விமர்சனப் பார்வையையும் முன்வைத்துள்ளார். சில நெறியாளர்களின் நேர்காணல்களை மொழிபெயர்த்து இணைத்துமுள்ளார். குறிப்பாக இந்திய-இலங்கை திரைப்படங்கள், நெறியாளர்கள் தொடர்பாக முக்கிய கவனம் செலுத்தியுள்ளார். இதை முழுமையாக வாசிக்கும் பொழுது திரைப்படம், நெறியாள்கை, நடிப்பு, ஒளிப்பதிவு, மற்றும் இத் துறைகளில் சிறப்பாக செயற்படுகின்றவர்கள் தொடர்பான நல்லதொரு பார்வை நமக்கு கிடைக்கின்றது. மேலும் சமூகப் பிரச்சினைகளான பொருளாதாரம், சுரண்டல், காலனித்துவ ஆதிக்கம் மற்றும் இன, மத, சாதிய, பால், பெண்ணிய, பிரதேச அடக்குமுறைகள், புறக்கணிப்புகள் தொடர்பான ஆழமான தெளிவான தனது விமர்சனப் பார்வைகளையும் இத் திரைப்படங்களின் அடிப்படையில் முன்வைக்கின்றார். இவை நம் சமூகத்தினதும் நாட்டினதும் மட்டுமல்ல சர்வதேசம் சார்ந்த ஒரு கண்ணோட்டத்தை நமக்குத் தருவதுடன் நல்ல தரமான சினிமா இரசனை பற்றிய ஆழமான புரிதலையும் தருகின்றது. இந்த நூல் வெறுமனே சினிமா அறிமுகமும் விமர்சனமும் மட்டுமல்ல ஒர் சமூக ஆய்வுமாகும் என்றளவில் முக்கியமானது.

மேலும் பார்க்க: பாலு மகேந்திரா நினைவுகள். 15931

ஏனைய பதிவுகள்

17313 பாலாஜியின் விடுகதைகள் புதிர்கள் 150 (நொடியும் விடையும்).

பாலாஜி. யாழ்ப்பாணம்: பாலாஜி பதிப்பகம், 15/5, முதலாம் ஒழுங்கை, மின்சார நிலைய வீதி, 1வது பதிப்பு, 1993. (யாழ்ப்பாணம்: இராசன் அச்சகம், 144, அருச்சுனா வீதி). (4), 28 பக்கம், விலை ரூபா 20.00,

14073 பசுவின் கதை.

காந்தளகம். யாழ்ப்பாணம்: காந்தளகம், 213, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, தை 1978. (யாழ்ப்பாணம்: ஸ்ரீகாந்தா அச்சகம், காங்கேசன்துறை வீதி). viii, 15 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×13.5 சமீ. இந்நூல் காலயுத்தி