15409 ஊஞ்சல் விளையாட்டு.

முருகு தயாநிதி. புதுச்சேரி 8: தமிழ்ப் புதுவை, 17, 14ஆவது தெரு, கிருஷ்ணா நகர், 1வது பதிப்பு, டிசம்பர் 2019. (சென்னை 600014: பிரிண்ட் பிராசஸ்). 

(9), 10-103 பக்கம், விலை: இந்திய ரூபா 100., அளவு: 23×15 சமீ., ISBN: 81-938307-6-5.

விளையாட்டு என்ற எண்ணக்கரு இன்று பரந்து விரிந்த பரிமாணம் கண்டுள்ளது. விளையாட்டுப் பாடல்கள் ஒவ்வொன்றும் சிறுவர்களின் கல்வி வளர்ச்சியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளன. இத்தகைய விளையாட்டுப் பாடல்கள் கல்வியியற் சிந்தனையின் பல்வேறு பரிமாணங்களைக் காட்டி நிற்கின்றன. குழந்தைகளுடைய அறிவு, திறன், மனப்பாங்கு, ஆளிடைத் தொடர்பு என்பன முறையான கல்வியைக் கற்பதனால் மட்டம் தான் உருவாகுவதில்லை. அவை முறைசாரா முறையிலும் முறையியல் முறையிலும் கட்டியெழுப்பப்படுவதனை கிராமிய நடைமுறையில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள செயற்பாடுகளில் இருந்தும் அறிந்துகொள்ள முடிகின்றது. அத்தகைய வெற்றிடங்களை நிறைவு செய்கின்ற வகையில் ஊஞ்சல் விளையாட்டும் அமைகினறது. இந்நூல் விளையாட்டு ஓர் அறிமுகம், விளையாட்டும் உளவியலாளர்களும், தேர்ச்சிமையக் கல்வியில் விளையாட்டு, விளையாட்டும் குழந்தை வளர்ச்சியும், கிராமிய விளையாட்டு, ஊஞ்சல் விளையாட்டு, தாளத்துடன் ஊஞ்சல் பாடலைப் பாடுதல் ஆகிய ஏழு இயல்களில் எழுதப்பட்டுள்ளது. கலாநிதி முருகு தயாநிதி இலங்கை தேசிய கல்வி நிறுவகத்தின் தமிழ்த்துறையில் முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றிவருகின்றார்.

மேலும் பார்க்க: யாழ்ப்பாணத்து மாட்டுவண்டிச் சவாரி. 15287

ஏனைய பதிவுகள்

Handy Casino Bonus Qua & Ohne Einzahlung

Content Inside Welchen Online Spielsaal Zum besten geben Darf Man Einen Prämie Vorteil? Willkommensbonus Goldene Tipps and Tricks Für Diesseitigen Casino Maklercourtage Bloß Einzahlung Wird