15411 கலை இலக்கியக் களமும் கடந்த காலமும்: வரலாற்றுக் குறிப்பேடு-3.

கோகிலா மகேந்திரன், ராஜி கெங்காதரன் (தொகுப்பாசிரியர்கள்). தெல்லிப்பழை: கலை இலக்கியக் களம், நூறாவது நிகழ்வு வெளியீடு, 1வது பதிப்பு, 2018. (அச்சக விபரம் தரப்படவில்லை).

56 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5  சமீ.

ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு தெல்லிப்பழை கலை இலக்கியக்களம் கடந்த 32 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கிய பங்களிப்புகள் இங்கு புகைப்பட ஆதாரங்களுடன் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. நூல் வெளியீடுகள், கருத்தரங்குகள், நாடக கவிதை சிறுகதைப் பட்டறைகள், பாராட்டு விழாக்கள், இலக்கியப் போட்டிகள், பரிசளிப்புகள், கல்வி வளர்ச்சி உதவிகள் முதலாக 05.04.1986 தொடக்கம் இற்றை வரை நூறு ஒன்று கூடல்கள் நடந்துள்ளன. 53 நூல்கள் பதிப்பித்து வெளியிடப்பட்டுள்ளன. ஈழப்போர் காரணமாகப் பல இடப்பெயர்வுகள் ஏற்பட்ட போதும் ஆங்காங்கு தொடர்ச்சியாக இலக்கியப் பணிகள் நடந்துள்ளன. எந்தவொரு நிறுவனமாயினும் அதன் வளர்ச்சிக்கு வரலாற்றுப் பதிவுகள் இன்றியமையாதன. இந்த வகையில் தெல்லிப்பழை  கலை இலக்கியக் களத்தின் நூறாவது ஒன்று கூடலின்போது அவ்வமைப்பின் நிகழ்வுகள் எப்போது எங்கே என்ன நிகழ்வு நடந்தது என்னும் விபரங்களுடன் இந்நூல் ஆவணமாகத் தொகுக்கப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Wildcoins Local casino

Blogs Choice ten Get fifty Gambling enterprise Incentive Allege Your following Casino No deposit Bonus Inside Canada Is 15 Totally free No deposit Bonuses Really

14275 ஐக்கியமும் அபிவிருத்தியும்.

ஆர்.பிரேமதாச (மூலம்), கிறிஸ்டி குறே (தொகுப்பாசிரியர்). கொழும்பு: உள்ளூராட்சி வீடமைப்பு நிர்மாண அமைச்சு, 1வது பதிப்பு, 1981. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம்). (2), 65 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: