சிங்கள தமிழ் எழுத்தாளர் ஒன்றியம். கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 661/665/675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, ஜீலை 2013. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்).
40 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29.5×21.5சமீ.
27.07.2013 அன்று சிங்கள தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடத்திய பாராட்டு விழாவின்போது விநியோகிக்கப்பட்ட ஒன்றியத்தின் ‘தீபம்’ சஞ்சிகையின் சிறப்பு மலர் இதுவாகும். மேற்படி சிங்கள தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் தலைவராக தெளிவத்தை ஜோசப்பும், செயலாளராக கமல் பெரேராவும், பொருளாளராக தேசபந்து சிறிசுமன கொடகேயும் பணியாற்றினர். இவ்விதழில் தமிழ் சிங்கள எழுத்தாளர்கள் பற்றிய யார் எவர் குறிப்புகளும், குணசேன வித்தான அவர்களின் வாழ்க்கை வரலாறும் இலக்கியப் பணியும் (மடுளுகிரியே விஜேரத்ன), பாலைவனத்தில் ஒரு பனித்துளி (பியதாச வெலிகன்னகேயின் சிறுகதை. தமிழாக்கம் மாவனல்லை எம்.எம்.மன்சூர்), அதிகாரமும் அறிக்கையும் (டெனிசன் பெரேராவின் சிறுகதை. தமிழாக்கம் வல்வையூரான்) ஆகிய ஆக்கங்களும், வங்கியியற் காதல் (ஹேமச்சந்திர பத்திரண), டியுஷன் ஆசிரியரின் கவிதை (திலிப் குமார லியனகே), வழி தவறிய கவிதையொன்று (டீ.திலக பியதாச), இலங்கை பத்திரிகையிலிருந்து வந்திருக்கும் ஐயாக்களோடு (சஜீவனி கஸ்தூரி ஆரச்சி) ஆகிய கவிதைகளின் தமிழாக்கமும் இடம்பெற்றுள்ளன.