15413 யாழ்ப்பாண ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கம்: வெள்ளிவிழா மலர் 1950.

இ.சி.கந்தசாமி (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: இ.சி.கந்தசாமி, யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கம், துன்னாலை, 1வது பதிப்பு, ஏப்ரல் 1950. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).

xvi, (32), 164 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25.5×19 சமீ.

இவ் வெள்ளிவிழா மலரில் யாழ்ப்பாண ஆரிய திராவிட  பாஷாபிவிருத்திச் சங்கமும் தமிழ்ப் பணியும் (அ.சரவணமுத்து), இரண்டும் வேண்டும் (யோகி ஸ்ரீ சுத்தானந்த பாரதியார்), ஏற்றத்தாழ் வில்லை (சக்கரவர்த்தி இராசகோபாலாச்சாரியார்), ஈழநாடும் தமிழரும் (அ.சிற்றம்பலம்), சுவையியல் (வே.வேங்கடராஜ{லு), பழந்தமிழ்ப் புலவர் சிறப்பியல்புகள் (அ.சிதம்பரநாத செட்டியார்), கம்பன் தன் கருத்தைப் பாத்திரங்களில் ஏற்றிக் கூறல் (சி.கணேசையர்), கம்பராமாயணம் (எஸ்.வையாபுரிப்பிள்ளை), யவ்விற்கு இய்யுமா? (க.சு.நவநீத கிருஷ்ண பாரதியார்), தமிழ்ச் செய்யுளின் தனி மாண்பு (ஒளவை சு.துரைசுவாமிப்பிள்ளை), இலக்கிய இன்பம் (கா.பொ.இரத்தினம்), வள்ளுவர் குறளைக் கம்பர் கையாண்ட வகை (சி.உருத்திரபதி), மெய்கண்டதேவர் காலமும் அவர் அமைத்த திருக்கோயிலும் (வு.ஏ.சதாசிவ பண்டாரத்தார்), பாசறை (க.வெள்ளைவாரணனார்), திருவள்ளுவரது கடவுட்கொள்கை (வி.பொன்னையா), கம்பரும் உடன்பிறந்தார் ஒற்றுமையும் (பூ.ஆலாலசுந்தரம் செட்டியார்), சேக்கிழார் மரபு (மா.இராசமாணிக்கம் பிள்ளை), அலக்சாண்டரின் ஆரம்ப பரிணாமவாதம் (தத்துவப் பிரியன்), ஆழ்வார்கள் அருளிச்செயல் (ஏ.எஸ்.சுந்தரராஜ ஐயங்கார்), பிரகேளிகை (ந.சுப்பையபிள்ளை), பெண்ணிற் பெருந்தக்க யாவுள (ஈ.த.இராஜேசுவரி அம்மையார்), தமிழில் பொதுச் சொற்கள் (மு.வரதராசன்), இலக்கியச் சுவை (க.ச.அருணந்தி), அறிஞர் ஆநந்தக்குமாரசுவாமி (க.நவரத்தினம்), ஆரியமும் தமிழும் (சி.கணபதிப்பிள்ளை), முத்தமிழ் விரகனார் (மா.பீதாம்பரம்), தமிழ் வழியாக வடமொழி கற்றல் (தி.சதாசிவ ஐயர்), சொற்கலைப் புலவர் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் (ஜீ.ஜே.பெனடிக்ற்) ஆகிய 28 இலக்கிய, மொழியியல் ஆக்கங்களை இவ்வெள்ளிவிழா மலர் கொண்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 4336).

ஏனைய பதிவுகள்

Jogos Gratis, Jogos Online E Novos Jogos

Content Desvantagens Puerilidade Aparelhar Poker Com Algum Contemporâneo | 50 giros grátis 5 reel drive Melhores Sites Puerilidade Poker Uma vez que Algum Contemporâneo Apontar