திமிலை மகாலிங்கம் (தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: தேனமுது இலக்கிய மன்றம், 1/1, டயஸ் வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 1965. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம், 32, கண்டி வீதி).
54 பக்கம், விலை: ரூபா 1.10, அளவு: 17.5×12 சமீ.
இந்நூலில் பல்வேறு குழந்தைக் கவிஞர்கள் எழுதிய 41 சிறுவர் கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. வன்னியூர் அறமகள் (யான் வேண்டுவன, சிறுவனும் புள்ளிமானும்), ஆலைமணி (அம்மா எங்கள் தெய்வம்), நமுனகுல ராஜேஸ் (என் அம்மா, பச்சைக் குயிலே), நடமாடி (தெய்வம்), புரட்சிபாலன் (தங்கத் தமிழே வா வா வா), ஆரையூர் அமான் (தமிழே எனது தாய்மொழி), சி.யோகேஸ்வரி (தாய்நாடு, பட்டு ரோஜா), துறையூர் செல்லத்துரை (ஈழநாடு), மட்டுநகர் முத்தழகு (காலைக் குயிலே), ம.கயிலாயபிள்ளை (ஆடு மயிலே), ஆ.லோகேஸ்வரன் (வெள்ளைக் கொக்கு), வி.த.குமாரசாமி (கள்ள எலி), துரையர் (ரோசாவும் நேருவும்), நவாலியூர்க் கவிராயர் (மழையே மழையே), திமிலைத் துமிலன் (மாலைக்காலம்), க.உமா மகேஸ்வரன் (காரணம் எதுவோ, பந்து), ஆடலிறை (நிலவே நீ வாழி, பாலகனே கேள்), வேலு (பட்டம்), ஆ.லோகேஸ்வரன் (புகைக் கப்பல்), நாகூர் ஏ.பாவா (முந்திரிக்கொட்டை), ஆ.காமாட்சி (பாரில் வந்து பாருங்கள்), மறைமுதல்வன் (புத்திமதி), ஆரையம்பதி ஆ.தங்கராசா (பள்ளித் தோழர்களுக்கு), ஏ.பி.வி.கோமஸ் (பாட்டாவும் பேரனும், கல்லி), கலியுகன் (தட்டுக்கோடு), பஸில் காரியப்பர் (குறையில் நிறை, கூட்டுறவு), வெண்சங்குவேள் (அறிந்துகொள்வாய்), செல்வி பாலதேவி (சுவாமி விபுலானந்தர்), ராஜம் புஷ்பவனம் (நாவலர் பெருமான்), ஆரையூர் அமரன் (பாரதி பாட்டு), திமிலைக் கண்ணன் (அடிமை வாழ்வு), திமிலை மகாலிங்கம் (சண்டை கூடாது, மச்சாளின் கல்யாணம்), செ.குணரத்தினம் (பேராசை பிடித்த புள்ளு) முதலியோர் புனைந்தவை இவை. (இந்நூல் மட்டக்களப்பு பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 0070).