உ.நிசார் (இயற்பெயர்: எச்.எல்.எம்.நிசார்). மாவனல்லை: பானு வெளியீட்டகம், 70/3, புதிய கண்டி வீதி, 1வது பதிப்பு, 2020. (மாவனல்லை: எம்.ஜே.எம்.அச்சகம், 119, பிரதான வீதி).
32 பக்கம், விலை: ரூபா 180.00, அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-0503-18-6.
சிறுவர் இலக்கியத்துக்கு அதிக பங்களிப்பைச் செய்துள்ள உதுமாலெப்பை நிசாரின் 10ஆவது சிறுவர் பாடல் தொகுப்பே சின்ன ரயில். இயற்கை, இயற்கையின் எழில், இயற்கையை அவதானித்தல், இயற்கைக்கு மனிதன் செய்யும் தீங்குகள், இயற்கையைப் பாதுகாத்தல் போன்ற பல்வேறு விடயங்களுடன் சிறுவர்களுக்கான அறிவுரைகளையும் நற்பழக்க வழக்கங்களையும் அவர் எளிய நடையில் எடுத்துரைக்கிறார். வேண்டுகின்றோம், எங்கள் நாடு, ஆலமரம், அந்தி நிலா, மேகம், கனவு காணுவோம், குஞ்சு வீடு, இயற்கை என்றும் அழகே, பூக்கள், சிந்தனைக்குச் சில துளிகள், அறிவுரைகள் கேள், ஓடிவா, வாழ்க தமிழ் மொழியே, எனது அம்மா, பூனைக்குட்டி, உழவர் சிறக்கவேண்டும், வசந்தம் மலர்ந்தது, ஆடலும் பாடலும், நாட்டுக்கு நன்மை செய்வோம் ஆகிய தலைப்புகளில் இப்பாடல்கள் எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 26067).