15419 பூவும் கனியும்: சிறுவர் பாடல்கள்.

 வெலிப்பன்னை அத்தாஸ். வெலிப்பன்ன: மொடர்ன் ஸ்டடி சென்டர், 41 ஏ, முஸ்லிம் வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2012. (வெலிப்பன்னை: D2D – Design  Studio).

(16), 32 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 150.00, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-8847-02-2.

சிறார்களுக்கு பயன்படக்கூடிய வகையிலும் அவர்களின் மனப்பாங்கு விருத்திக்கு உதவக்கூடிய வகையிலும் இந்நூல் வெளிவந்துள்ளது. சிறுவர்களை நன்கு புரிந்து அவர்களை நல்வழிப்படுத்தும் வகையில் தனது பாடல்களை வெலிப்பன்னை அத்தாஸ் எழுதியுள்ளார். இறைவனை முன்னிறுத்தி அல்லாஹ், உத்தம நபி, என் அம்மா, எங்கள் அப்பா, பாட்டி, பூந்தோட்டம், பூனை, குதிரை, காகம், விமானம், விளையாட்டு, புகைவண்டி, மழையே பெய்திடுவாய், கடற்கரைக் காட்சி, புத்தகம், இலங்கை எங்கள் நாடு, தென்றல், பஸ் வண்டி, பசுவும் கன்றுக்குட்டியும், வீதிச்சட்டம் அறிவோம், தொலைக்காட்சி, தம்பி ஓடி வா, வட்ட நிலா, காடுகள், தென்னை மரம், வீடு, பட்டம், கூண்டுக்கிளி, வெள்ளைக் கொக்கு, மாம்பழம் எனத் தலைப்பிட்டு 30 பாடல்களைப் பூவும் கனியும் எனத்தலைப்பிட்டுத் தந்துள்ளார். சிறுவர்களை அவர்களின் மனவளர்ச்சியை ஒட்டிய வயதுக்கேற்ப, முன்பள்ளி, வகுப்பு 1-3, வகுப்பு 4-6 என வகுத்து, அவர்களுக்கேற்ற பாடுபொருளாக வீடு, குடும்ப அங்கத்தவர், பிராணிகள், பறவைகள், வீட்டு விலங்குகள், இயற்கை, நிலா, வாகனங்கள், மரங்கள், பூந்தோட்டம் என்பவற்றை அமைத்துள்ளதுடன் பாடல்களுக்குப் பொருத்தமான புகைப்படங்களையும் சேர்த்துள்ளார்.

ஏனைய பதிவுகள்