15421 மழலைத் தமிழ்ப் பாக்கள்.

வேலழகன் கதிரவேல், வாகினி கதிரவேல். யாழ்ப்பாணம்: வேலழகன் கதிரவேல், 246 கோவில் வீதி, நல்லூர், 1வது பதிப்பு, மே 1985. (யாழ்ப்பாணம்: செட்டியார் பதிப்பகம், 411/1, காங்கேசன்துறை வீதி, வண்ணார்பண்ணை).

viii, 24 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.

ஈழத்துத் தமிழ்க் குழந்தைக் கவிதைகளின் தொகுப்பு நூல். அரச மரக் கூட்டுத்தாபனத்தின் சாலை முதல்வரான கருகம்பனை வேலாயுதம் கதிரவேல் (09.08.1932-10.05.1985) அவர்களின் நினைவு வெளியீடாக 25.05.1985 அன்று வெளியிடப்பட்டது. இத்தொகுப்பில் இ.நாகராஜன் (அப்பா), குறமகள் (தாத்தா), ஆடலிறை (நல்ல வாத்தியார்), க.வேந்தனார் (நொண்டி), மு.நல்லதம்பி (பாவைப் பிள்ளை), வை.இளையதம்பி (பந்தடிப்போம்), க.வீரகத்தி (பாலர் ஆடும் பந்து), த.துரைசிங்கம் (டும் டும் மேளம்), யாழ்ப்பாணன் (பாலர் பூசை), ம.பார்வதிநாதசிவம் (அம்புலிமாமா), அல்வாயூர் மு.செல்லையா (வளர்பிறை), சாரணா கையூம் (சாப்பிட வா), நவாலியூர் க.சோமசுந்தரப் புலவர் (மாம்பழம்), மஹாகவி (தோசை), வெ.விநாயகமூர்த்தி (எண் பாட்டு), ஆரையூர் அமரன் (பாரதி பாட்டு), கல்வயல் வே.குமாரசாமி (வண்டுக் கப்பல்), பா.சத்தியசீலன் (வெள்ளைநிறப் பூக்குட்டி), மா.பீதாம்பரம் (ஆலமரப் பாட்டு), சி.அகிலேசசர்மா (புத்தியாக நட), க.சச்சிதானந்தன் (காய்கள் கட்டிய வெருளி), கனக செந்திநாதன் (பாட்டி அழுகின்றாள்), கதிரேசன் (பாசம்), அம்பி (காகமும் நரியும்) ஆகிய 24 படைப்பாளிகளின் மழலைப் பாடல்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Dragon’s Chance Luxury Video slot

Posts Booming Game Slot machine Analysis No Free Video game Free Position Video game Compared to A real income Ports Gamble Columbus Deluxe From the