15423 விறுவிறுப்பான அறுபது கவிதைகள்: சிறுவருக்கான சிறு சிறு கவிதைகள்.

 செல்லத்தம்பி சிறீக்கந்தராசா. லண்டன்: செல்லத்தம்பி சிறீக்கந்தராசா, Seven King, Illford, Essex, 1வது பதிப்பு, 2021. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 672B, காங்கேசன்துறை வீதி).

xviii, 82 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 22×15 சமீ., ISBN: 978-624-5786-03-9.

நூலாசிரியரின் நோக்கம் புலம்பெயர்ந்து இங்கிலாந்தில் வாழும் தமிழர், தம் மொழி, பண்பாடு, கலாசாரம் பற்றிய பூரண அறிவு பெற்றோங்கி, அவை அழிந்தொழிந்து போகாமற் காக்க வேண்டும் என்பதாகும். அதற்கேற்ப இதிலுள்ள சிறுவர்களுக்கான கவிதைகள் எழுதப்பட்டுள்ளன. மொத்தம் 63 கவிதைகள் இதில் இடம்பெற்றுள்ளன. ஆடுவோம் பாடுவோம் அன்பர்களே, தூறுதுபார் மழை தூறுதுபார், முயலே முயலே முன்னால் வா, பாம்பே பாம்பே ஓடாதே! வெள்ளீ வெள்ளீ நல்லாய் நீ, வண்ண வண்ணப் பூவிலே, ஓடிப் பிழைக்கும் நரியாரே!, மழையே மழையே பெய்யாதே!, மீண்டும் பறுவம் ஆகின்றாய் !இ, ஆதவ னேநீ நூதனமே, நலந்தானே நீ நற்காக்கா? மழையே மழையே திரும்பிப்போ, தேனீ! தேனீ! தேன் ஈ நீ!, கா கா என்றால் காப்பார் யார்?, ஏஞ்சலே என் காஞ்சனா?, வரத்தைப் பெற்றாய் மரங்கொத்தி, கனத்த மனத்துடன் கரந்து வாழ்கிறேன், கடவுளே! கடவுளே!, முறுவலால் மடக்கி விட்டேன், விடுதலை பெற வழி வகுத்தவன் புத்தனோ?, கன்னித் தமிழைக் கற்றுக்கொண்டது, வானகம் போனான் இன்று, கீழ்ப்பட்ட எனது நட்பும் ஓர் நட்பா, மழையேஇ மழையே! போய்விடு நீ! என இன்னோரன்ன 63 சிறுவர் பாடல்கள் செழுந்தமிழ் கலந்து இயற்றித் தரப்பட்டுள்ளன. யக்கும் சில்லும் மலை மேலே, இலண்டன் பாலம் இடிகிறதே!, வா வா எங்கள் கறுமறியே போன்ற மேலும் சில ஆங்கிலச் சிறுவர் பாடல்களும் அழகுறத் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்