15426 பஞ்சாயுதம் (நாடகங்கள்).

மறவன்புலோ செல்லம் அம்பலவாணர். கொழும்பு 15: மறவன்புலோ செல்லம் அம்பலவாணர், 478/28, அளுத்மாவத்தை வீதி, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: கே.ஜே.என்டர்பிரைசஸ், 63, விகாரை ஒழுங்கை, வெள்ளவத்தை).

xxiv, 115 பக்கம், சித்திரங்கள், தகடுகள், விலை: ரூபா 300., அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-42626-2-1.

இது ஒரு இசையுடன் கூடிய சிறுவர் நாடக நூல். இப்பஞ்சாயுதத்தில் ‘சிலம்பு’ கொண்டு வழக்குரைத்து, வடையினூடு ‘நீதி” சொல்லி, ‘பழி’ யில் பாம்பு பருந்து கதை சொல்லி, நதியார் வைத்த நீதிப் ‘பொறி’ யில் விழுந்த சிங்கத்தையும், மாம்பழத்துக்காக அன்று ‘கலகம்’ செய்தவர்களை இன்று கணனியினூடு கலகம் செய்யவைத்தும் சிறவர்களுக்கென படைக்கப்பட்ட இலக்கிய வடிவமாகப் பூரணப்படுத்தப்பட்டுள்ளது. மறவன்புலோ செல்லம் அம்பலவாணர் ஒரு கணித வல்லநராக, பொறியியலாளராக, நாடகாசிரியராக, வானொலி தொலைக்காட்சி நடிகராக, சிறுவர் இலக்கியப் படைப்பாளியாக, ஆன்மீகத்தில் ஒரு திருமுறை ஓதும் தொண்டராக எனப் பல்பரிமாணங்களினூடாக அறியப்பட்டவர்.

ஏனைய பதிவுகள்

17219 ஓர்மத்தின் உறைவிடம் இஸ்ரேல்.

ஐங்கரன் விக்கினேஸ்வரா. பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஏப்ரல்; 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி). 108 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 500.,