15427 பாடி ஆடும் பருவப் பாடல்கள் (பாலர்க்கான நாடகத் தமிழ்).

ஈழத்துப் பூராடனார் (இயற்பெயர்: க.தா.செல்வராசகோபால்). கனடா: நிழல் வெளியீடு, ஜீவா பதிப்பகம், # 3, 1292, Sherwood Mills, Mississauga, Ontario, L5V 1S6, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2001. (கனடா: ரிப்ளெக்ஸ் அச்சகம், #3, 1292, Sherwood Mills, Mississauga, Ontario, L5V 1S6).

ix, 10-208 பக்கம், புகைப்படங்கள், விலை: கனேடிய டாலர் 20.00, அளவு: 21×14 சமீ.

பாலர்களுக்கான பாடி ஆடும் தமிழ் நாடகங்களின் தொகுப்பு. இதில் ‘ஜீலியர் சீசர் நடன நாடகம்’ (மழைக்குமாரி-இசை நடன நாடகம், ஆரோக்கிய குமாரி-இசை நாடகம், இளம்பிள்ளை வாதம்-நடன நாடகம், கிருசிக குமாரி-நாட்டிய நாடகம்), ‘கூத்துக்கள்” (எரிந்தது மதுரை-வடமோடிக் கூத்து, கணையாழி கண்ட சீதை-தென்மோடி கூத்து, கம்பராமாயணம்- வசந்தன் கூத்து, தொழுதுண்டு வாழாதே- காவடி ஆட்டம், குறிஞ்சி வளம்-குறவன் குறத்தி கூத்து), ‘நாடகத் தமிழ் கற்பித்தல்’, ‘இசையும் உரையும் கலந்து கதை சொல்லல்’ (தர்மம் தலைகாக்கும்-கதாப்பிரசங்கம், உத்தமர் காந்தி-காலாட்சேபம், உமர் பாரூக்-வில்லுப்பாட்டு, மயான காண்டம்-தனியாள் பல்குரல் பாத்திர நடிப்பு), ‘அங்க சேஷ்டை நையாண்டி’ (இரண்டு சினேகிதர்களும் கரடியும், நரிக்குக் காகம் சொல்லிக் கொடுத்த தந்திரம், பேரன் பார்த்த கூட்ட நிகழ்வுகள்), ‘சில குறிப்புகள்” (சம்வாதம்-நாளாந்தர சுகநல வழிகள், ஏசல்-இரவுக் கன்னியும் பகல் குமரியும்), ‘மேலதிக நாடகத் தமிழ்க் கூறுகள்: குறுநாடகங்கள்’ (விளையும் பயிர்-சமூக நாடகம், மனம் போல வாழ்வு-நாடகம், தலை நிமிர்ந்த தமிழன்), ‘பாலர்களுக்கான பனித்துளி நாடகங்கள்’ (எல்லாளன், சிங்ககிரிச் சகோதரர்கள், எகிப்தைக் காத்த தளபதி நாகீப்), ‘பரமார்த்த குரு கதைகள்’ (குதிரை மட்டை-சிறுவர்களுக்கான ஓரங்க நாடகம், நித்திரை கொள்ளும் ஆறு-சிறியவர்களுக்கான நாடகம்), ‘தாளலயம்” (சலவைக் காரனும் முதலையும்-தாளலய நாடகம், பாண்டுரோகம் பிடித்த பாலன்- தாளலய நாடகம், அம்மைப்பால் கட்டுதல்-ஓரங்க நடிப்பு, சுத்தமும் சுகமும்), ‘முடிவுரை’ ஆகிய 11 பிரிவுகளில் இந்நாடகநூல் எழுதித் தொகுக்கப்பட்டுள்ளது. (இந்நூல் மட்டக்களப்பு பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2765). 

ஏனைய பதிவுகள்

Free Ports Playing Enjoyment

Articles Position Competitions How we Rates Canadian Ports Casinos Rngs And you can Pay Percentages Simple tips to Gamble Ports Online Some great benefits of