15432 யாழ் கதைகள் : இளையோர் சிறுகதைகள்.

பிரமிள் (மூலம்), சித்தி அமரசிங்கம் (தொகுப்பாசிரியர்), கால சுப்பிரமணியம் (பதிப்பாசிரியர்). தமிழ்நாடு: லயம் வெளியீடு, 155, கிழக்கு வீதி, நேரு நகர், சத்தியமங்கலம் 638402, 1வது பதிப்பு, 2009.

68 பக்கம், சித்திரங்கள், விலை: இந்திய ரூபா 29.00, அளவு: 20.5×13.5 சமீ.

பிரமிள் எழுதிய இளையோருக்கான கதைகளின் தேர்ந்த தொகுப்பு இது. கதவைத் தொட்ட நிழல், தூக்கனம், அம்மா, இரவு மனிதன், இருளிலே ஒரு குரல், தீப்பந்தம், தொங்கும் பிணம், நிலவிலே, புதையல், வேலமரத்துப் பேய், பேய்வீடு, செல்லன், அறை விழுந்தது, சித்திரக் கதை ஆகிய 14 கதைகள் இத்தொகுப்பில் தேர்ந்து தரப்பட்டுள்ளன. பின்னிணைப்பாக பிரமிளின் ஆரம்பகாலப் படைப்புகள் பற்றிய குறிப்பும் காணப்படுகின்றது. பிரமிள் (ஏப்ரல் 20, 1939 – ஜனவரி 6, 1997) என்ற பெயரில் எழுதிய தருமு சிவராம், இலங்கையில் திருக்கோணமலையில் பிறந்தவர். தமிழகத்து எழுத்தாளராக அறியப்பெற்றவர். பாரதி, புதுமைப்பித்தனுக்குப் பிறகு தோன்றிய ஒரு இலக்கிய மேதை. தமிழின் முதன்மையான கவிஞர், விமர்சகர், சிறுகதையாசிரியர். புதுக்கவிதை முன்னோடிகளுள் முக்கியமான ஒருவராக இவர் கருதப்படுகிறார். இவர் பானுசந்திரன், அரூப் சீவராம், பிரமிள் போன்ற பல புனைபெயர்களில் எழுதினார். அடிக்கடி தம் பெயரை மாற்றிப் புதுப்பித்துக் கொண்டேயிருந்தவர். ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவர்.

ஏனைய பதிவுகள்

Promethazine A Buon Mercato Liguria

Promethazine A Buon Mercato Liguria Che succede se prendi troppi antistaminici? Dove acquistare Phenergan Syrup 100 ml 100 ml generico sul banco in Italia? Cosa