ஏ.சீ.ஜரினா முஸ்தபா. மாவனல்ல: எக்மி பதிப்பகம், 19, கமந்தெனிய வீதி, கிரிங்கதெனிய, 1வது பதிப்பு, ஏப்ரல் 2011. (மாவனல்ல: பாஸ்ட் கிராப்பிக்ஸ், 3/G, ஹசன் மாவத்தை).
40 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-1825-08-9.
1985இல் ஏ.சீ.கமருன் நிஷா என்னும் பெயரில் தமிழ் எழுத்துலகில் நுழைந்த இந்த இஸ்லாமிய பெண் படைப்பாளியின் நான்காவது நூலாக இவ் விளையோருக்கான கதைத்; தொகுப்பு வெளிவந்துள்ளது. இலக்கியத் துறையில் சுமார் 30 வருட காலம் அநுபவம் மிக்கவர், ஸ்ரீ ஜயவர்த்தனபுர பிட்டகோட்டையில் பிறந்து, கடுவெல வெளிவிட்டயில் தற்போது வசித்து வருகின்றார். இச்சிறுவர் இலக்கியத்தில் உண்மையான நட்பு, அன்னையின் ஆசீர்வாதம், அப்பா கஞ்சத்தனம் வேண்டாம், சிறைப் பறவை, தண்டனை, கல்விக்கு காதல் தடை வேண்டாமே, உறுதி வேண்டும் ஆகிய தலைப்புகளில் இக்கதைகள் எழுதப்பட்டுள்ளன.