15434 வண்டல் மண்: சிறுவர்களுக்கான நீதிக் கதைகள்.

மறவன்புலோ செல்லம் அம்பலவாணர் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 15: மறவன்புலோ செல்லம் அம்பலவாணர், 478/28, அளுத்மாவத்தை வீதி, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: கே.ஜே. என்டர்பிரைசஸ், 63, விகாரை ஒழுங்கை, வெள்ளவத்தை).

xv, 106 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-42626-5-2.

சிறுவர்களுக்கான இக்கதைத் தொகுப்பினை ஆசிரியர் பத்திரிகைகள், இணைய ஊடகங்கள், மின்னஞ்சல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தான் வாசித்த குட்டிக் கதைகளைத் தேர்ந்து தொகுத்து தனி நூலாக இளஞ்சிறார்களுக்கென வழங்கியுள்ளார். பல்லூடகங்களில் இருந்து தற்கால சமூகம் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளை மையப்படுத்தியதாக எழுதப்பட்ட 33 சிறுவர் கதைகளைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்து,  அவை சமூகத்துக்குக் கூற விளைகின்ற தத்துவத்தினைச் சுட்டிக்காட்டுவதுடன் அத்தத்துவத்துடன் பொருந்தக்கூடிய திருக்குறள் பாவொன்றயும் பொருளுடன் இணைத்துத் தந்துள்ளார். அம்மா, கண்டிப்பு, பெற்றோர், ஆசை, பாசம், கட்டுப்பாடு, எண்ணம், பக்தி, சோதனை, விலை, கல்லும் மண்ணும், பணக்காரன், பாராட்டு, பொறுப்பு, மேதாவி, உள்மனது, மதிப்பு, தீர்மானம், வாழ்க்கை, தலைக்கனம், மனம், தீர்ப்பு, உண்மை, சமயோசிதம், நேர்மை, சகிப்பு, பொருள், புகழ், அறிவு, படிப்பினை, சந்தர்ப்பம், நிம்மதி, விமர்சனம் ஆகிய 33 தலைப்புகளில்  இக்கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Harbors Pay By Cell phone Bill

Posts Online slots games Versus House How does Strictlyslots European union Internet casino Position Website Avoid Condition Gambling? To experience Harbors On the web I