15437 அன்னை சொல்லைத் தட்டாதே: சிறுவர் சித்திரக் கதைகள்.

ஆனந்தராணி நாகேந்திரன். (புனைபெயர்: நெல்லை லதாங்கி). கரவெட்டி: ஆனந்தா நாடக மன்றம், மகாத்மாவீதி, நெல்லியடி, 1வது பதிப்பு, ஆவணி 2019. (யாழ்ப்பாணம்: சத்தியா பிரின்டர்ஸ்).

16 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 200., அளவு: 28.5×20.5 சமீ., ISBN: 978-955-53908-4-2.

மழையில் நனைந்து விளையாட முற்படும் கோபிகன் தாயாரினால் தடுக்கப்படுகிறான். அவனது செல்லப்பிராணிகள் அவனுக்குத் துணையாகின்றன. சொல்வழி கேட்கும் கோபிகன் வீட்டினுள் நல்ல பிள்ளையாக இருந்து புத்தகம் வாசிக்கிறான். அயலவனான நண்பன் வசீகரன் தாய் சொல்லைத் தட்டியபடி மழையில் விளையாடிக்கொண்டிருந்தான். கோபிகனின் வளர்ப்பு நாய்களான ஜிம்மியும் ராஜியும் வசிகரனுடன் சேர்ந்து விளையாடுகிறார்கள். வசீகரனோ தாயாரின் சொல்லுக்குக் கட்டுப்படாமல் தொடர்ந்தும் மழையில் விளையாடுகிறான். தாய்மாமன் வந்ததும்  கதைசொல்வதாகக் கூறிய அவரது அழைப்பை ஏற்று கதை கேட்கவென உள்ளே செல்கிறான். தாய்மாமன் தாய் சொல்லைக் கேட்காமல் வேடனிடம் சிக்கிய குருவியின் கதையைச் சொல்லி வசீகரனை சமாதானப்படுத்துகிறார். வடமராட்சி வலயக்கல்வி அலுவலகத்தில் சங்கீத பாடத்திற்கான ஆசிரிய ஆலோசகராகப் பணியாற்றுபவர் நெல்லை லதாங்கி. கலை இலக்கியத்; துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிவருபவர்.

ஏனைய பதிவுகள்

Reel Fishing Wikipedia

Articles Do you know the advantages of to try out in the on line real money gambling enterprises? Regarding the Mona Lisa to the Holy