15438 உலகை வெல்ல முயன்றவன்.

சி.வ.ஏழுமலைப்பிள்ளை. கிளிநொச்சி: வல்லிபுரம் ஏழுமலைப்பிள்ளை, வேந்தன் வெளியீடு, 11ஃ01, மலையாளபுரம் தெற்கு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2019. (கிளிநொச்சி: சிவா பதிப்பகம்).

v, 83 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 19×14 சமீ., ISBN: 978-955-41133-2-9.

கி.மு. 356 ஆம் ஆண்டு ஜூலை 20 ந்தேதி மாஸிடோனியாவில் மன்னர் பிலிப்ஸ்க்கு மகனாக கிரேக்க மண்ணில் உதித்தவர் தான் அலெக்ஸாண்டர். அலெக்ஸாண்டர் இந்த உலகை கட்டி ஆள்வான் என்று அரச சோதிடர்கள் கணித்து சொன்னதும் மன்னன் அகம் மகிழ்ந்தான். பிறந்ததிலிருந்தே அலெக்ஸாண்டரிடம் அறிவுக் கூர்மையும் அதீத வீரமும் குடிகொண்டிருந்தன. அந்த மாமன்னனின் வரலாறு  இங்கே இளையோருக்கான நாவலாகியுள்ளது. உலகை வெல்ல முயன்றவன், வெற்றியின் பிறப்பு, சிறுவன் அலெக்சாண்டர், அடங்காக் குதிரை, குதிரை மட்டும், முதல் போர், அரியணையில் அலெக்சாண்டர், சென்றான் வென்றான், கலங்கவைத்த பாரசீகப் போர்க்களம், இஸ்ஸஸ் யுத்தம், காதலும் வாழ்வும், மன்னா மாவீரா, இலட்சிய வீரன் இறப்பதில்லை, பொன் மொழிகள், அலெக்சாண்டரின் முதல் பேச்சு ஆகிய அத்தியாயங்களின் ஊடாக அலெக்சாண்டரின் வரலாறு இங்கே சுவையான கதையாக நகர்த்தப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

12117 – வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் கருணைமலர்: புனராவர்த்தன கும்பாபிஷேக மலர்-2003.

ஹேமா ஷண்முகசர்மா (பதிப்பாசிரியர்). முல்லைத்தீவு: அருள்மிகு ஸ்ரீ வற்றாப்பளைக் கண்ணகை அம்மன் தேவஸ்தானம், வற்றாப்பளை, திருத்திய 2வது பதிப்பு, 2003, 1வது பதிப்பு, 1978. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).