15448 மாணவர்களுக்கான மகாபாரதக் கதைகள்.

தேன்மொழி சபா (இயற்பெயர்: திருமதி கனகமணி சபாலிங்கம்). திருக்கோணமலை: இந்து மன்றம், இ.கி.ச.ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி, 1வது பதிப்பு, 2020. (திருக்கோணமலை: பென் விஷன் அச்சகம், 87, பிரதான வீதி).

xx, 102 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 300., அளவு: 22×16 சமீ., ISBN: 978-624-95940-0-5.

அறமீறல்கள் அன்றாடம் நம் சமூகத்தில் வளர்ந்து வரும் இன்றைய நிலையில் இளையோரை நெறிப்படுத்த இதிகாசக் கதைகளே அத்திபாரமாக அமைகின்றன. அவ்வகையில் சிறுவர்களுக்கு மகாபாரதக் கதைகளை எளிமையான வழியில் உரைப்பதற்கு ஆசிரியர் முயற்சிசெய்துள்ளார். அருச்சுனனின் ஆற்றல், பாண்டவர்களின் நல்லியல்பு, பீமனும் வீர ஆஞ்சனேயரும், இல்லறத்தின் சிறப்பு, இன்னா செய்தாரை, உபப்பிலாவியத்தில் பாண்டவர்கள், பணிவு, எமக்குக் கிடைக்கும் வெற்றிகள், திருதராஷ்டிரரின் நல்லியல்பு, நம்முடன் கூட வருவது ஆகிய தலைப்புகளில் இக்கதைகள் எழுதப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

14923 சொல்லின் செல்வர் இர. சிவலிங்கம்.

எச்.எச்.விக்கிரமசிங்க (மலராசிரியர்). இலங்கை: அமரர் இர.சிவலிங்கம் நினைவு மலர் வெளியீட்டுக்குழு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1999. (அச்சக விபரம் தரப்படவில்லை). (6), 50 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18.5 சமீ.