15450 பார்வதியின் பிள்ளைகள் (இளையோர் நாவல்).

ஜயசேன புத்பிட்டிய  (சிங்கள மூலம்), ஆர்தர் ஜோன்ஸ் பெர்ணாண்டோ (தமிழாக்கம்). கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 661ஃ665ஃ675  பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2016. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்).

(11), 12-159 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 22.5×15 சமீ., ISBN: 978-955-30-6649-7.

 ‘பார்வதியின் பிள்ளைகள்’ கட்டிளமைப் பருவத்தினருக்கான நாவல். கட்டிளமைப் பராயம் என்பது பிள்ளைப் பராயத்துக்கும் இளைஞர் பராயத்துக்கும் மத்தியிலான வளரிளம்பருவக் காலகட்டமாகும். கட்டிளமைப் பருவத்தாரின் ரசனைக்கு வழிகோலும் வனப்பான பருவமே இப்பருவம். மனப்பாங்குகள் உருவாகும் பருவமும் இதுவே. அப்பருவத்தில் உடன்பாடானவை இனம்காணுபவரால் தம் வாழ்க்கையை வினைத்திறனாக்கிக் கொள்ளலாம். எதிர்மறையானதைத் தெரிவுசெய்பவர் தம்மை அழிவின்பால் இட்டுச்செல்வார். இந்நாவல் தமிழ்-சிங்கள இன ஒருமைப்பாட்டின் உடன்பாடான விடயங்களைத்தான் குறிப்பிடுகிறது. போர்ச் சூழல் தணிந்துள்ள தற்காலத்துக்கு ஏற்புடைய மனப்பாங்குகளைக் கொண்ட நாவல் இது என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டில் ஏற்படவேண்டிய சிறந்த சிங்கள-தமிழ் இன உறவுகள், தமிழ்ச் சமூகம் என்பன பற்றித் தமது உளமார்ந்த நல்லெண்ண உணர்வுகளை இந்நாவலில் ஆங்காங்கே வெளிப்படுத்தும் ஆசிரியர் முதலில் அவற்றைத் தனது மொழியில் தமது இனத்தவருக்கே உணர்த்தியுள்ளார் என்பது அவதானத்திற்குரியது. இந்நாவலாசிரியர் ஜயசேன புத்பிட்டிய, மஹரகம தேசியகல்வி நிறுவகத்தில் உயர் பதவி வகித்து இளைப்பாறிய ஒரு கல்வியியலாளராவார்.

ஏனைய பதிவுகள்

Poker Dado: Que Afastar a jogar

Content 💰 Posso abichar arame real nos jogos de blackjack acessível?: ramses ii $ 1 depósito Algum Fictício – PokerStars ESC Online: 10€ Grátis sem