15452 கதம்பம்: சிறுவர் பாடல்கள் சிறுவர் நாடகம்.

செபமாலை பெனடிக்ரா. மன்னார்: செல்வி செபமாலை பெனடிக்ரா, ஆசிரியை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2019. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).

32 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 300., அளவு: 25×17.5 சமீ., ISBN: 978-624-95489-0-9.

மன்னார் மாவட்ட மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் நிதி ஆதரவுடன் வெளியிடப்பட்டுள்ள இந்நூலில் சிறுவர்களுக்கான ஆக்கப் பாடல்களும், ‘மாற்றம்’ என்ற தலைப்பில் எழுதப்பட்ட சிறுவர் நாடகமும் இடம்பெற்றுள்ளன. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதலாவது பார்வையற்ற பெண் மாற்றுத்திறனாளி மாணவியாக உள்நுழைந்து, 2002இல் இளங்கலைமாணிப் பட்டதாரியானவர் செல்வி செபமாலை பெனடிக்ரா. இவர் 06.11.1972இல் மன்னாரில் (கன்னாட்டி, அடம்பன்) பிறந்தவர். கைதடி நவீல்ட் பாடசாலையில் ஆரம்பக் கல்வியைப்பெற்ற இவர் யாழ் மருதனார் மடம் இராமநாதன் மகளிர் கல்லூரியிலும் சுண்டுக்குளி மகளிர் கல்லூரியிலும் தனது இடைநிலைக் கல்வியைத் தொடர்ந்தார். 14 ஆண்டுகளாக ஆசிரியராகப் பணியாற்றும் இவர், பாடசாலை மாணவர்களுக்கான கலை, கலாசாரப் போட்டிகளிலும் கலை நிகழ்ச்சிகளிலும் தாராளமான பங்களிப்பை வழங்கி வருகிறார். மேடை நாடகங்கள், சிறுவர் நாடகங்கள், சிறுகதைகள், கட்டுரைகள், சிறுவர் பாடல்கள் என்பவற்றையும் தொடர்ச்சியாக எழுதிவருகின்றார்.

ஏனைய பதிவுகள்

Geburtsland Spritz vaterland-spritz

Content Forest band Mobile – Heimat: Heft? Gut die Vaterland Vereinnahmung des Heimatbegriffs durch die politische Rechte Resolution “Couleur darstellen pro die Heimatland” Damit ist

15228 பதின்மூன்றாவது அரசியல் யாப்பு சம்பந்தமான யதார்த்தமும் சில உண்மைகளும்.

சிதம்பரம் மோகன். இராஜகிரிய: சத்தியம் வெளியீடு, 114/6, கமத்தவத்த வீதி, வெலிகட, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு: ஸ்டார் அச்சகம்). (7), 24+69 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 22×16

15733 பூமாஞ்சோலை.

சிவ ஆரூரன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஜுன் 2018. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). viii, 116 பக்கம், விலை: