15455 கூடல் (பரல் 1): கண்ணகி கலை இலக்கிய விழா மலர் 2012.

அன்புமணி  இரா.நாகலிங்கம் (தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: கண்ணகி கலை இலக்கியக் கூடல், 45யு, பிரதான வீதி, சின்ன ஊறணி, 1வது பதிப்பு, 2012. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 126/1, திருமலை வீதி).

64 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29×22 சமீ.

2012 ஜீலை 28 முதல் 29 வரை கண்ணகி கலை இலக்கியக் கூடல் அமைப்பினரால் ஒழுங்குசெய்யப் பெற்ற கண்ணகி கலை இலக்கிய விழாவினையொட்டி வெளியிடப்பெற்ற 2012க்கான ஆண்டு மலர் இது. இம்மலரில் மட்டக்களப்பில் வரலாறு படைத்த கண்ணகி இலக்கிய விழா (தம்பு சிவா), வழக்குரைக்கும் கண்ணகி (கி.துரைராசசிங்கம்), கண்ணகி இலக்கியங்களில் கிழக்கின் பண்பாடு (வி.ரி.சகாதேவராஜா), கண்ணகி நம்பிக்கைகள்-ஏனைய பிரதேசங்களுடனான ஒரு பொது நோக்கு (வெல்லவூர்க் கோபால்), அந்நிய அறிஞர்களின் தேடலில் கண்ணகி (ந.தங்கேஸ்வரி), கிழக்கிலங்கை சமூகத்தில் சிலப்பதிகாரம் கூறும் வாழ்வியல் (எஸ்.மோசஸ்), கடல்கொண்ட காவிரிப் பூம்பட்டினம் (அனுசூயா சேனாதிராஜா) ஆகிய ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

14050 திருச்சபை வரலாற்றுத் துளிகள்.

சா.பி.கிருபானந்தன். யாழ்ப்பாணம்: தூய பிரான்சிஸ்கு சவேரியார் குருத்துவக் கல்லூரி, கொழும்புத்துறை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2007. (கொழும்பு: கத்தோலிக்க அச்சகம்). (30), 122 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 29.5×21 சமீ. ஈழத்

12578 – ஆரம்ப விஞ்ஞானம்: ஆண்டு 5.

கு.வி. அச்சகத்தினர். யாழ்ப்பாணம்: கு.வி.அச்சகம், 1வது பதிப்பு, 1997. (கொழும்பு 13: கு.வி.அச்சகம், 58, கிறீன் லேன்). (4) 108 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 80., அளவு: 26.5×20 சமீ. 1997ஆம் ஆண்டு