15458 சிலம்பு போற்றுதும்: சிலப்பதிகாரச்சிறப்பு மலர் 2016.

தெ.மதுசூதனன் (மலர் ஆசிரியர்). கொழும்பு 6: மலர்க் குழு, கொழும்புத் தமிழ்ச்சங்கம், இல.7, சங்கம் ஒழுங்கை, 1வது பதிப்பு, மே 2016. (கொழும்பு: ஆர்.எஸ்.டீ. என்டர்பிரைசஸ், ஹைலெவல் வீதி).

vii, 132 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 24.5×17.5 சமீ.

கொழும்புத் தமிழ்ச் சங்கம் நிகழ்த்திய சிலப்பதிகார விழா 2016 மே 20-22 திகதிகளில் மூன்று நாள் நிகழ்வாக நடைபெற்றது. அவ்வேளையில் வெளியிடப்பட்ட சிறப்பு மலர் இதுவாகும். சிலப்பதிகாரத்தைப் போற்றும் மலராக வெளிவந்துள்ள இந்நூல் நீண்ட இலக்கியப் பெருவெளியின் பரவலுக்கு முதல்வரான இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தை சீர்மையாய்ப் போற்றி நிற்கின்றது. இம்மலரில் முத்தமிழ்க் காப்பியம் சிலப்பதிகாரத்தின் முப்பரிமாணக் கோலம் (சு.செல்லத்துரை), சிலப்பதிகாரம்: கொண்டதும் கொடுத்ததும் (க.இரகுபரன்), உ.வே.சா. -சிலப்பதிகாரப் பதிப்புக் குறித்து (நா.மம்மது), சிலப்பதிகாரமும் சமூக மனமும் உளவொளியும் (சபா.ஜெயராசா), சிலப்பதிகாரத்தில் அறமும் அரசியலும் (வி.சிவசாமி), பேரரசு உருவாக்கமும் சிலப்பதிகாரத்தின் இலக்கிய அரசியலும் பகுதி ஒன்று (சிலம்பு செல்வராசா), சிலம்பில் ஒலிக்கும் குறள் பரல்கள் (கந்தையா பத்மானந்தன்), சிலப்பதிகாரத்தில் பெண் (சோ.கிருஷ்ணராஜா), சிலப்பதிகாரம் ஒரு பெண்ணிய நோக்கு (அ.அ.மணவாளன்), சிலப்பதிகாரத்தில் காணப்பெறும் நாடகம் பற்றிய தகவல்களின் பகுப்பாய்வு (கா.சிவத்தம்பி), மாதவி அரங்கேறினாள் (க.சி.கமலையா), சிலப்பதிகார இசைப்பாடல்களில் குரவைப் பாடல்கள் (கிருபாசக்தி கருணா), சிலப்பதிகாரமும் இலக்கியத் திறனாய்வும் (க.பஞ்சாங்கம்) ஆகிய ஆய்வுக்கட்டுரைகள் மீள்பதிப்பாக இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

13969 தமிழினத்தின் விடுதலைக் குரல்.

கே.எஸ்.ஏ.கபூர். யாழ்ப்பாணம்: சி.கதிரவேற்பிள்ளை, பாராளுமன்ற உறுப்பினர், கோப்பாய் தொகுதி, இலங்கை தமிழ் அரசுக் கட்சி, 90, 2ஆம் குறுக்குத் தெரு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1973. (யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம், 226, காங்கேசன்துறை வீதி).

12020 – அகமலர்ச்சி.

சுவாமி சின்மயானந்தா (ஆங்கில மூலம்), பிரமச்சாரி வியக்த சைதன்யா (தமிழாக்கம்). கொழும்பு 3: சின்மயா மிஷன், எண்.15, மைல்போஸ்ட் அவென்யூ, 1வது பதிப்பு, பதிப்பு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 14: எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன்