15464 அந்தமிழ் அறுபது.

சிவராசசிங்கம் நிர்மலா. சுவிட்சர்லாந்து: திருமதி சிவராசசிங்கம் நிர்மலா, Langenthal, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2018. (யாழ்ப்பாணம்: மெகா பதிப்பகம்).

(8), 60 பக்கம், ஓவியங்கள், விலை: 20 சுவிஸ் பிராங், அளவு: 20.5×15 சமீ.

ஈழத்தின் வடமராட்சியில் அல்வாய் வடக்கு கிராமத்தைச் சேர்ந்தவரான திருமதி நிர்மலா தற்போது புலம்பெயர்ந்து சுவிட்சர்லாந்து நாட்டில் வாழ்ந்து வருகிறார். தான் எழுதிய  அறுபது மரபுக் கவிதைகளைத் தொகுத்து இந்நூலை வெளியிட்டுள்ளார். (அந்தமிழ் என்பது அம் + தமிழ் – அழகிய தமிழ் என்று பொருள்படும்). அறுபது பக்கங்களிலும் பக்கத்துக்கொரு கவிதையாக அழகிய வண்ணக் கலவை கொண்ட வடிவமைப்பில் இவை எழுதப்பட்டுள்ளன. வெண்செந்துறை, குறள் வெண்பா, வெள்ளொத்தாழிசை, நேரிசை வெண்பா, குறளொளிர் வெண்பா, பூட்டுவில் வெண்பா, சவலை வெண்பா, கட்டளை வெண்பா, இரட்டை வெண்பா, பலவிகற்ப இன்னிசை வெண்பா, தனிச்சொல் வெண்பா, இதழ் அகல் வெண்பா, தலையாக எதுகை வெண்பா, மடக்கு அணி வெண்பா, புதிர் வெண்பா, இன்னிசை வெண்பா, சிலேடை வெண்பா, ஒற்றிலா வெண்பா, மும்மண்டில வெண்பா, நேரிசை ஆசிரியப்பா, ஆசிரியத் தாழிசை, அறுசீர்க்கழிநெடிலடி விருத்தம், எழுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம், எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம், வெண்டளையான் இயன்ற எண்சீர்  விருத்தம், கட்டளைக் கலித்துறை, காப்பியக் கலித்துறை, தரவு கொச்சகக் கலிப்பா, இயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா, கட்டளைக் கலிப்பா, வெண் கலிப்பா, கலி விருத்தம், கலித்தாழிசை, வஞ்சிப் பா, வஞ்சித் தாழிசை, வஞ்சி விருத்தம், மருட்பா, இணைக்குறள் ஆசிரியப்பா, அக்கரச் சுதகம், சிந்து பா, கும்மிச் சிந்து, ஒயிற்கும்மி, இலாவணி சிந்து பாடல், நொண்டிச் சிந்து, காவடிச் சிந்து, வளையற் சிந்து எனக் கவிதைப் பூக்கள் விரிந்துள்ளன. ஆசிரியரின் மூன்றாவது படைப்பே இந்நூலாகும். 

ஏனைய பதிவுகள்

Position Programs

Content Best A real income On the web Position Video game June 2024 Have there been Legit Android Gambling Software? An informed Online slots games