முகில்வாணன். கண்டி: சமாதானம், இல.89, தெக்கே வத்த, தென்னக்கும்புற, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2011. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 126/1, திருமலை வீதி).
xxvi, 216 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 18ஒ13 சமீ., ISBN: 978-955-1372-0-8.
முகில்வாணனின் 37 கவிதைகளுடன் வெளிவந்துள்ள இந்நூலில், கோலவாயில், ஒரு தென்றல், தேடுவோம், உடன் உறவுகள், மண்ணும் மானமும், வெல்லும் சொல், உண்மையின் கனி, நம்பிக்கை, யதார்த்தம், இல்லச் சுத்தம், வேற்றுமை வேண்டாம், நெஞ்சே நினைத்துப்பார், நேற்று நாளை இன்று எங்கே?, நீங்கள் யார்?, பரிணாம வளர்ச்சி, ஏன் இந்த யுத்தம், யுத்தம், திரும்பிப் பார், மகிழ்ச்சியைத் தரிசியுங்கள், வாலிபரே, ஊமைகளின் மௌனம், உலகத் தீமையைத் தூக்காதே, ஒரு மெல்லிய புன்னகை, துன்பப்படும் தூயவர்கள், நிழல்கள் அல்ல நிஜங்கள், விடுதலையின் குரல்கள், மனிதம் விடுதலை அடையும், ஆயுதத்தை அல்ல அன்பைத் தேடுங்கள், நீதிமான்களைத் தேடுங்கள், மகிழ்ச்சி மரணிப்பதில்லை, மயான பூமி, இளங்கதிர்களே எழுந்து வாருங்கள். விடிவு இருளுக்க முடிவு, மறுபடி பிறப்பீர்களா?, மனிதத்தை விடுதலை செய்யுங்கள், சாகாத தத்துவம், யாரிடம் சொல்வோம் யாரோடு சேர்வோம், ஆகிய தலைப்புகளில் இக்கவிதைகள் எழுதப்பட்டுள்ளன. கிழக்கிலங்கையின் மட்டக்களப்பைச் சேர்ந்த கவிஞர் முகில்வாணன் (முகில்வாணன் இராசையா), ஈழத்து தமிழ் கவிஞராவார். சில காலம் ஜெர்மனியில் வாழ்ந்த இவர் தென்இந்தியாவில் இறையியல் கல்வியில் தேர்ந்து டிப்ளோமா பட்டம் பெற்றவர். இலங்கையில் திருமறை போதகராகப் பணிபுரிகின்றார். (இந்நூல் மட்டக்களப்பு பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 4691).