தர்மினி. சென்னை 600 005: கருப்புப் பிரதிகள், பி 55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2020. (சென்னை 600005: ஜோதி என்டர்பிரைஸஸ்).
72 பக்கம், விலை: இந்திய ரூபா 75.00, அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-81-943310-5-6.
‘தேச எல்லைகள், யுத்தம், நிறவெறி என்பன ஊடுருவிய அகதி மனதின் அகப்பாடல் வடிவம் தர்மினியுடையது. ஆனால், புகலிட வாழ்வுக்கென்று எழுதி வைத்திருக்கும் பரிதாப அபலைக் கதையாடல் நியதியை மறுத்து, அந்த வாழ்வில் சாத்தியமாகக்கூடிய சுவாரசிய – அசுவாரசியங்களை தர்மினி பதிவு செய்கிறார். ஆண்களுக்கென்றே ஆகிவந்திருக்கும் அந்நியமாதல் விசாரம் இங்கே அன்றாடத்தின் பரப்பில், குடும்ப நிறுவனத்துக்குள், இலக்கிய நண்பர்களுக்குள், முகநூல் தொடர்புகளுக்குள், சக நகரவாசிகளோடு நடாத்தப்படுகிறது. ஆனால், இதன் விளைவாக அவநம்பிக்கையையோ மானுட வெறுப்பையோ தர்மினி வந்தடைவதில்லை. மாறாக, அபத்த தரிசனத்தை மீறிக் காதலையும் கனவையும் திளைப்பையும், அவற்றைச் சாத்தியமாக்கும் கவிதை எழுத்தையும் தக்கவைத்துக் கொள்ளவேண்டுமென்ற ஏதோ ஒரு தவிப்பால் அவர் உந்தப்படுவதை வாசிக்கிறோம். மிக அடிப்படையான இந்த மானுட எத்தனத்தை அகம்கொள்ளும் இக்கவிதைகள் அந்நியத்தின் தொலைதூரத்தைக் கடக்க எத்தனிப்பவை” (ஹரி இராசலட்சுமி, குறிப்புரையில்)