15469 அரிவாள்.

துறையூர் காசி (இயற்பெயர்: செ.காசிலிங்கம்). யாழ்ப்பாணம்: செ.காசிலிங்கம், 1வது பதிப்பு, ஆனி 2013. (யாழ்ப்பாணம்: துசி என்டர்பிரைசஸ், 82, கோவில் வீதி, நல்லூர்).

xx, 80 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

கவிஞர் துறையூர் காசியின்  65 கவிதைகளின் தொகுப்பே இந்நூலாகும். அறிவியலுக்கு ஒவ்வாத பழமைவாத சமூகக் கட்டுமானங்களை தகர்ப்பதற்கான தேவையினையும் இலங்கையின் தேசிய ஒருமைப்பாட்டினை தவிர்த்துவிட முடியாத அவசியத்தினையும் தன் கவிதைகளில் எடுத்துச் சொல்லியிருக்கிறார். தன்னுள் வாழ்ந்துகொண்டிருக்கின்ற தேசத்தின் மீதான பற்றுதலை சில கவிதைகளில் கூறும் இக்கவிஞர், மனித சமுதாயத்திற்கு கல்வியின் மேன்மையினையும் அதன் அவசியத்தினையும் எடுத்துரைக்க வேண்டுமென்ற தனது ஆதங்கத்தினால் எழுந்த சில கவிதைகளையும், காதல், இரக்கம், பணம், சாதியம் போன்றவற்றை மையக்கருவாகக் கொண்ட வேறும் பல கவிதைகளையும் இத்தொகுப்பில் வழங்கியிருக்கிறார்.

ஏனைய பதிவுகள்